Header Ads



எதற்குமே அசராத 'இரும்புத் தலையர்' (வீடியோ)

எதற்குமே அசராத அசாத்தியமான துணிச்சல் கொண்டவர்களை ‘இரும்புத் தலையர்’ என்று சொல்வதுண்டு. அதனால்தான், இந்திய விடுதலை போரின்போது பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தின் அடக்குமுறைகளுக்கு சற்றும் அஞ்சாமல் பீரங்கிக்கு முன்னாலும் நெஞ்சை நிமிர்த்தி துணிச்சலுடன் கம்பீரமாக நின்ற சர்தார் வல்லபாய் பட்டேலை வரலாற்று ஆசிரியர்கள் ‘இரும்பு மனிதர்’ என்று வர்ணித்தனர். ஆனால், அந்த வரலாற்றை திரும்பிப்பார்க்கும் ஒரு தருணத்தை தென்மேற்கு சீனாவை சேர்ந்த ழாவ் ருய் என்ற 24 வயது இளைஞர் ஏற்படுத்தியுள்ளார். 

தற்காப்பு கலையான ‘குங்ஃபூ’வின் மீது குழந்தைப்பருவத்தில் இருந்தே தணியாத ஆசை ஏற்பட்டது. தனது 16-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி சீனாவின் புகழ்ப்பெற்ற ஷாலின் டெம்பிள்-க்கு ஓடிப்போனார். தற்காப்பு கலையின் அனைத்து பரிணாமங்களையும் ஒருங்கே கற்றுத்தேர்ந்த ழாவ் ருய், தனது உடலை மலைப்பாறையாக மாற்றி வைத்துள்ளார். 

குறிப்பாக அவரது தலைப்பகுதியை குண்டு வைத்துதான் தகர்க்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு திடப்படுத்தியுள்ளார். நின்ற நிலையில் ஒருவர் கீழே விழுந்தாலே மண்டை பிளந்து குபுகுபுவென ரத்தம் கொட்ட தொடங்கி விடுகின்றது. அடி கொஞ்சம் பலமாக பட்டுவிட்டால் மூளையில் காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுவிட நேர்கின்றது. சராசரி மனிதரின் நிலை இவ்வாறிருக்க, ழாவ் ருய் தனது தலையின் மீது பட்டையான ஒரு இரும்பு சட்டத்தால் சம்மட்டி போல் வைத்து அடுத்தடுத்து அடித்தாலும், அவரது தலையில் சிறு கீறல் கூட விழுவதில்லை. 

தலையின் பக்கவாட்டில் டிரில்லிங் இயந்திரத்தால் துளையிட்டாலும், டிரில் பிட் உடைந்து தெறித்தாலும் தெறிக்குமேயொழிய இவரது தலையை துளைக்க முடியவில்லை. தரையில் குத்திவைத்த நான்கு கூரிய ஈட்டிகளின் மீது இவர் குப்புற படுத்துக்கொள்ள முதுகின் மீது ஒரு பெரிய கல்லை ஏற்றிவைத்து சம்மட்டியால் அடித்தபோதும் இவரது தொண்டைக்குழி மற்றும் இதயத்தை குறிவைத்து நிற்கும் கூர்முனை ஈட்டிகள் இவரை ஒன்றும் செய்வதில்லை. மிக நீளமான இரும்பு கம்பியை சுவற்றில் குத்திவைத்து, அதன் மறுமுனையை தனது தொண்டைக்குழியில் பொருத்தி கம்பியை வில்லாக வளைக்கிறார். கூரிய ரம்பத்துடன் கூடிய கத்தியை ஒரு கயிற்றின் நுனியில் கட்டி, கழுத்தில் மாலை போல் அணிந்தபடி, கயிற்றின் எதிர்முனையின் மூலம் ஒரு காரையே கட்டி இழுக்கிறார். 

இத்தனை ஆற்றலுக்கும் தனது மனம் மற்றும் உடலை பலப்படுத்திய ஷாலின் டெம்பிள் பயிற்சிகளே முக்கிய காரணம் என குறிப்பிடும் ழாவ் ருய், இவற்றை எல்லாம் நம்மால் செய்ய முடியும் என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் மூலக்காரணம் என்று கூறுகிறார். இந்த செய்தியுடன் இணைக்கப்பட்ட வீடியோ அவரது தன்னம்பிக்கையை நிச்சயமாக பதிவு செய்யும் என நம்புகிறோம். வீடியோ

1 comment:

  1. இந்த நபரின் செயல் வீரமாக இருந்தாலும் சில நேரம் நீங்கள் பதிவேற்றும் இந்த வீடியோ கராத்தே போன்ற தற்காப்புக்கலை பயிலும் அல்லது விநோத செயல்கள் புரிவதில் ஆர்வம் அதிகம் வைத்திருக்கும் சிலரின் உயிரை சோதிக்கும் செயலாக அவா்களை ஆர்வம் காட்ட செய்திடலாம்.இப்படியான வீடியோக்களை பரப்ப வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.