Header Ads



'எனது குழந்தைகளின் வெற்றியை பார்க்க வந்துள்ளேன்' புற்றுநோயுடன் போராடும் நியூசிலாந்து கெப்டன் மார்டின் குரே உருக்கம்

"நாளை மெல்பர்னில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதி ஆட்டம்தான் நான் பார்க்கவுள்ள கடைசி கிரிக்கெட் போட்டியாக இருக்கும்" என்று புற்றுநோயுடன் போராடி வரும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் தெரிவித்துள்ளார்

உலகக் கோப்பை இறுதிப்போட்டியை நேரில் பார்ப்பதற்காக மெல்பர்ன் நகருக்கு வந்துள்ள மார்ட்டின் குரோவ், இந்த போட்டி குறித்து கூறுகையில், ''நான் புற்றுநோயுடன் போராடி வருகிறேன். தற்போதைய உடல்நிலை மோசமாக இருப்பதால் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண முடியவில்லை. எனினும் புற்றுநோயுடன் வாழ பழகிக் கொண்டுள்ளேன். இந்த தொடரை பொறுத்தவரை ராஸ்டெயிலரும், மார்ட்டின் கப்திலும் நியூசிலாந்து அணியின் வெற்றிக்காக போராடி வருகின்றனர். கேப்டன் மெக்கல்லம் அவரது பாணியில் விளையாடி வருகிறார். எனது குழந்தைகளின் வெற்றியை பார்க்க வேண்டுமென்பதற்காக ஒரு தந்தையின் உணர்வோடு, முடியாத நிலையிலும் நான் மெல்பர்ன் வந்துள்ளேன்'' என்றார்.

கடந்த 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து அணியின் கேப்டனாக மார்ட்டின் குரோவ் இருந்தார். நியூசிலாந்து அணியின் டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன் எடுத்த இரண்டாவது வீரர் மார்ட்டின் குரோவ்தான். 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மார்ட்டின் குரோவ், 5 ஆயிரத்து 444 ரன்களை  எடுத்துள்ளார்.. 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 ஆயிரத்து 704 ரன்களை அடித்துள்ள மார்ட்டின் குரோவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எவ்வளவோ சிகிச்சை அளித்தும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னும் 12 மாதங்களுக்கு மேல் அவர் உயிரோடு இருக்க 5 சதவீதமே வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 52 வயதான மார்ட்டின் குரோவ், மோசமான உடல்நிலையிலும் நியூசிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்வதை நேரில் பார்க்க  வேண்டுமென்ற ஆவலில் மெல்பர்ன் வந்துள்ளார். மார்ட்டின் குரோவுக்காக நியூசிலாந்து கோப்பையை வெல்லுமா?

1 comment:

  1. புற்றுநோயை இறைவன் ஏன் படைத்தானோ?

    ReplyDelete

Powered by Blogger.