Header Ads



ரஷ்யாவை எச்சரித்துள்ள, சவூதி அரேபியா

-முகநூல் முஸ்லிம் மீடியா-

முஸ்லிம்களின் உணர்வுகளோடு ரஷ்யா விளையாட நினைத்தால் தக்கப்பாடம் புகட்டி விடுவோம் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை.....!!

முஸ்லிம்களின் உணர்வுகளோடு ரஷ்யா விளையாட நினைத்தால் ரஷ்யாவுக்கு தக்கப்பாடம் புகட்டி விடுவோம் என்று சவூதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு,

சவூதி அரேபியாவில் அரபு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

அதற்கான காரணம் சிரியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து கொண்டு சிரியாவிலுள்ள சன்னி முஸ்லிம்களை கொன்று வருகிறது.

அதனால் சிரியாவுக்கு மாநாட்டிற்கான அழைப்பு அனுப்பப்படவில்லை,

அரபு கூட்டமைப்பின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டித்து கடிதம் எழுதினார்.

சிரியாவில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டு வரும் சூழலில் ரஷ்யா அதிபரின் இந்த கடிதத்திற்கு அரபு உச்சி மாநாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சௌத் அல் ஃபைசல் பேசியபோது,

மத்திய கிழக்கில் முஸ்லிம்களின் உணர்வுகளோடு ரஷ்யா விளையாடுவதாகவும், ரஷ்யா தன்னை திருத்திக்கொள்ளவில்லை என்றால் சோவியத் ரஷ்யாவுக்கு முஸ்லிம்கள் பாடம் புகட்டியது போல் தற்போதைய ரஷ்யாவுக்கும் முஸ்லிம்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தகவல் உதவி : சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி

6 comments:

  1. சவூதி முஸ்லிம்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையில் இறங்கி உள்ளது என்பது மட்டும் தெளிவு.

    இஸ்ரவேல் மீது ஒரு தோட்டா கூட சுடுவதற்கு வக்கற்ற சவூதி அரேபியா, ரஷ்யாவை எச்சரிக்கின்றதாம்.

    கூரை ஏறி கோழி பிடிக்கப் பயந்தவன், வானத்தில் ஏறி சுவர்க்கத்திற்குப் போவேன் என்றானாம்.

    ReplyDelete
  2. Ippathan thambi arabu naddula muslimkalai patti kavalai varuthu ithuthan aarambam

    ReplyDelete
  3. American'ku payanthu idha sollitaaru..... Innamum Solluvaru!!!

    ReplyDelete
  4. சகோதரர்களே! ஸவுதியின் யெமனுக்கு எதிரான போராட்டம் பற்றிய செய்தி உங்களுக்கு எப்போது தெரிந்தது? இந்தத் தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்கே ஸவுதி சொல்லவில்லை என்று அமெரிக்க அறிக்கைகள் சொல்கிறது. கூட்டனியில் இருக்கும் சில நாடுகளுக்கே திட்டம் முழுமையாகத் தெரியாது என்று அவர்களின் அறிக்கைகள் எங்களுக்குச் சொல்கிறது. அப்படி இருக்கையில் எங்கள் ஊகங்கள் எப்படி சரியானவையாக இருக்க முடியும். உலகத்தில் அரசாங்கங்களுக்கிடையிலான தொடர்புகள் மறைவானவை. எனவே அவற்றில் ஊகங்களை வைத்து விமர்சிப்பதை நாம் தவிர்ந்துகொள்ள வேண்டும். ரஷியாவை உடைத்தவர்கள் அரபுத் தலைவர்கள்தான் என்பது பலருக்கும் புதிதாக இருக்கலாம் ரஷியாவுக்கு எதிராக்ப்போராடிய தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஸவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் அந்த அரசாங்கத்தினால்தான் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டார்கள். எனவே, ஊடகத்தில் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்பவர்கள் மற்றவர்கள் மீது இட்டுக்கட்டிய குற்றத்திற்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும். ஸவுதி முஸ்லிம்கள் மீது கவனம் செலுத்தவில்லையென்றால் யார் செலுத்தினார்கள்? உங்கள் வீட்டிலிருக்கும் குர்ஆன் பிரதி யாரால் அச்சிடப்பட்டது? உங்கள் பள்ளியில் மத்ரஸாக்களிலிருக்கும் கிதாபுகள் யாரால் அச்சிடப்பட்டது? முஸ்லிம்கள் பாதிக்கப்படும்போது இன்றைக்கும் ஓடிவந்து உதவுபவர்கள் யார்? ஸவுதி, ஏன் சில நாடுகளுக்கு எதிராக இன்னும் இரானுவ நடவடிக்கையில் இறங்கவில்லை என்பது எவருக்கும் தெரியாத ரகசியம். எனவே, இதை வைத்து அதன் எல்லா சேவைகளையும் மறந்து பேசுவது எந்தளவுக்கு இறைவனிடம் உங்களுக்கு கூலிகளைப் பெற்றுத் தரும் என்று நான் நினைக்கவில்லை. அல்லாஹ் எல்லோரையும் மன்னிக்கப் போதுமானவன்.

    ReplyDelete
  5. When some of our brothers unite them with certain JAMATHS, They exhibits what they are inculcated by their groups leaders.

    Just what their leaders tell them out of ignorance and hates toward SAUDI Arabia.. makes these people to simply write negative comments.

    May Allah Guide our brothers from misguidance to the way of SALAF but not the way of HALAF who take their desires to follow.

    ReplyDelete

Powered by Blogger.