Header Ads



இந்நாட்டில் முஸ்லிம்கள் அச்சம்கொண்ட ஒரு காலம் இருந்தது - றிசாத்

குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தமது அரசியல் அடைவுகளை அடைந்து கொள்ள முடியாது போனதனாலேயே நாம் இங்கு அதனை பெற்றுக் கொடுக்க வரவேண்டிய தேவையேற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் உங்களுக்கு அந்த அரசியல் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் எமது கட்சி முழுமையான பங்களிப்பினை செய்யும் என்று கூறினார்.

தெள்ளியகொன்னயில் ஆரம்பித்து வைக்கப்ட்ட குருநாகல் மாவட்ட யுவதிகளுக்கான இலவச தையல் பயிற்சி நெறியின் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
இஸ்லாம் சகல துறைகளுக்கும் வழிகாட்டும் ஒன்றாகும்.அந்த வகையில் அரசியலும் இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவமாகும்.சிலர் அரசியல் வாதிகளை ஒதுக்கி வைத்துவிட்டு எதையும் செய்யலாம் என்று எண்ணகின்றனர்.இதனை இன்னும் சாத்தியப்பாடுள்ளதாக மாற்ற கல்வி மான்களும், அரசியல் வாதிகளும் ஒரே இடத்தில் இருந்து பேசி முடிவகளை எடுக்க வேண்டும்.

சில மாவட்டங்கள் இருக்கின்றது.அநுராதபுரம், புத்தளம், குருநாகல்,கம்பஹா, களுத்துரை மாவட்டங்களில் நாம் ஒன்றுபடுவதன் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்ளும் சந்தரப்பம் இருக்கின்ற போதும்,எம்மில் ஒற்றுமையின்மை காரணமாக அந்த சந்தர்ப்பத்தை நாம் இழந்துள்ளோம்.இது எம்மில் களையப்பட வேண்டும்.அதற்காக வேண்டி தான் நாம் இந்த மாவட்டத்திற்குள் வந்து உங்களுடன் இந்த கலந்துரையாடல்களை செய்கின்றோம்.

இன்று பயிற்சி பெறும் இந்த யுவதிகள்,நல்ல முறையில் பிரயோசனப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆறுமாத பயிற்சியின் பின்னர் நீங்கள் இலவச தையல் இயந்திரத்தை பெற்று அதன் மூலம் உங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.

அரசியல் அதிகாரம் இன்றி எதனையும் எம்மால் பெற்றுக் கொள்ள முடியாது.இந்த அதிகாரமும் தான் இன்று இந்த பயிற்சி நிலையத்தினை இந்த மாவட்டத்திற்கும் வந்துள்ளது.இது போன்று இன்னும் எத்தனையோ மாவட்ட மக்கள் இதனை வேண்டி நிற்கின்றனர்.அவர்களுக்கும் இதனை செய்ய வேண்டும் என்றால் எமது மாவட்டத்திலும் அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும். நாம் கட்சி மட்டும் இருந்தால் போதுமென்று நாம் சிந்திக்கின்றவர்கள் அல்ல,சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை மட்டுமே நாம் நோக்கி செயற்படுகின்றோம். இந்த நாட்டில் முஸ்லிம்கள் அச்சம் கொண்ட ஒரு காலம் இருந்தது என்றால் அது மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டுப்படுத்த முடியாமல் போன நாசகார சக்திகளின் கோலோச்சம் காணப்பட்டது.அதற்கு எதிராக செயற்படுங்கள் என்று ஜனாதிபதிக்கு சொன்ன போதும்,அதை அவர் செய்யவில்லை. இந்த ஆட்சி நீடித்தால் இந்த நாட்டு முஸ்லிம்களால் வாழ முடியுமா என்ற கேள்விகள் பலத்த குரலில் எழுப்பப்பட்ட போது, அதற்கு காதுகொடுத்து கேட்கும் அளவுக்கு கூட கட்சிகள் இல்லாமல் இருந்த போது அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து இந்த சமூகத்தின் நலனுக்காக,எதிர்காலத்திற்காக நாம் எடுத்த தீர்மானம் இந்த மக்களுக்கு விமோசனத்தை கொடுத்துள்ளது என்பதை கேட்கின்ற போது அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இந்த மாவட்டத்தில் அனைத்து கட்சிகளும்,தமது கருத்துக்களை மறந்து அனைத்து துறைசார்ந்தவர்களும், ஒன்றினைந்து  எமக்கான ஒரு பாராளுமன்றப் பிரதி நிதிததுவத்தை உறுதிப்படுத்துவோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அழைப்புவிடுத்தார்.

No comments

Powered by Blogger.