Header Ads



முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் - காலி முகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்கள் அணிந்து மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணிப்­பதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்கள் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் முற்­றாகத் தடைசெய்­யப்­பட்­டுள்­ளது என பொது ஒழுங்­குகள் அமைச்சர் ஜோன் அம­ர­துங்க தெரிவித்திருந்தார்.

அதன்படி ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மோட்டார் சைக்­கிளை செலுத்­து­வோரோ அல்­லது பின்னால் அமர்ந்து செல்­ப­வரோ முகத்தை முழு­மை­யாகமறைக்கும் தலைக்­க­வ­சத்தை அணிந்து பய­ணித்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக உடன் தண்டப் பண பத்­திரம் பொலி­ஸா­ரினால் வழங்­கப்­படும்.

மோட்டார் வகன சட்­டத்தின் 158 ஆவது அத்­தி­யா­யத்தின் 2 ஆவது மற்றும் மூன்­றா­வது உப பிரி­வு­களின் கீழும் 1991 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 11 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 644ஃ 26 ஆம் இலக்க அரசின் விஷேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் கீழும் 2015 ஆம் ஆண்டின் தண்­டப்­பண அதி­க­ரிப்பு சட்­டத்தின் கீழும் இந் நடவ்­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­து.

எனினும் சாத­ர­ண­மாக பயன்­ப­டுத்­தப்­படும் தர­மான தலைக் கவ­சங்­களில் முன் பக்­க­மாக வைசர் எனப்­படும் திறை­யினை பயன்­ப­டுத்த தடை இல்லை. அப்­படி வைசர் திரையை பயன்­ப­டுத்­து­வ­தானால் அது பல் வர்­ணங்­களைக் கொன்­ட­தாக இருக்க முடி­யாது என்­ப­தையும் சட்டம் குறிப்­பி­டு­வ­துடன் முகம் தெளி­வாக தெரியும் படி இருக்க வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­து­கின்­றது.

1983 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 245 ஆம் இலக்க வர்த்­த­மானி அறி­வித்­தலில் இந்த விடயம் குறித்து வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அதில் மோட்டார் சைக்­கிளில் பய­ணிப்­ப­வர்­களை 25 மீற்­றர்­க­ளுக்கு அப்பால் இருந்தே தெளி­வாக அவ­தா­னிக்க கூடி­ய­தாக தலைக்­க­வ­சங்கள் அமைய வேண்டும் என்­பது வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
  
இந்நிலையில் இத் திட்டத்துக்கு எதிராக காலி முகத்திடலில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. முகத்தை மறைப்பது பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு எதுவாக இருக்கின்றது. முகத்தை கட்டாயமாக தடை செய்யப்படல் வேண்டும்.

    ஹஜ்ஜு, உம்ராவின் பொழுது கூட முகத்தை மறைப்பதை இஸ்லாம் கட்டாயமாக தடை செய்துள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.