Header Ads



விஜயதாஸ ராஜபக்ஷவின் சவால், மறுக்கிறார் அநுரகுமார திசாநாயக்கா (வீடியோ)

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் விவாதத்துக்கு வருமாறு, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்டிருந்த கருத்தொன்றுக்கு பதில் வழங்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி நாட்டில் இருந்து தப்பி செல்வதற்கான உதவிகளை, விஜயதாஸ ராஜபக்ஷ மேற்கொண்டதாக ஜே வி பியின் தலைவர் குற்றம் சுமத்தி இருந்தார்.

நிஷ்ஷங்க சேனாதிபதி நாட்டில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி அவரின் கடவுச் சீட்டையும் நீதிமன்றம் பறித்திருந்தது.

இந்த நிலையிலேயே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.


எவன்காட் விவாதத்திற்கு வரவேண்டிய எவ்வித அவசியமும் எனக்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் நான் இதுவரை கூறியது அனைத்தும் உண்மை, இனிமேல் நான் பேசப்போவதும் உண்மை என அனுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் விவாதத்துக்கு வருமாறு, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி நாட்டில் இருந்து தப்பி செல்வதற்கான உதவிகளை, விஜயதாஸ ராஜபக்ச மேற்கொண்டதாக ஜே.வி.பியின் தலைவர் குற்றம் சுமத்தி இருந்தார்.

நிஷங்க சேனாதிபதி நாட்டில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி அவரின் கடவுச்சீட்டையும் நீதிமன்றம் பறிமுதல் செய்திருந்தது என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.