Header Ads



பிரதமர் பதவிக்காக ரணிலுடன், மோதலுக்கு தயாராகும் மைத்திரி..?


நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால், ஜனாதிபதி பதவியில் எந்த பிரயோசனமும் இல்லை எனவும், ஜனாதிபதி பதவி என்பது பெயரளவிலான பதவியாக மாத்திரமே இருக்கும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக எதிர்வரும் தேர்தலில் களமிறக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி 8ம் திகதி அதிகாரத்திற்கு வந்தார்.

ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்த பின்னர், உரையாற்றிய அவர், 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறினார்.

அத்துடன் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் வரப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த 62 லட்சம் மக்கள் அவர் எவ்வித அதிகாரமும் இன்றி இருப்பதை காண விரும்பவில்லை என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இது.. இது பேச்சு... ரசிக்கப்பட வேண்டிய அரசியல் காய் நகர்வு. தற்போதைய அரசியல் சூல்னிலைக்கு வைக்கப்பட்ட நல்ல check point.

    ReplyDelete

Powered by Blogger.