Header Ads



யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை, மீட்பதற்கு ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை

யேமனில் இடம்பெற்று வருகின்ற மோதல்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு ஐக்கிய நாடுகளின் உதவியை கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

யேமன் தலைநகர் சானாவை அண்மித்த பகுதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வர, இந்திய கடற்படையினரின் உதவியையும் பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு, அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா , கம்பஹா, கந்தானை, தொம்பே, பிலியந்தலை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே யேமன் நாட்டில் நிர்கதியாகியுள்ளனர்.

இதேவேளை. யேமனில் மோதல்களில் சிக்கியுள்ள மூவாயிரத்து 500க்கும் மேற்பட்ட இந்தியப் பிரஜைகளை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக இந்திய அரசாங்கம் கப்பல்களை அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளது.

மோதல்கள் வலுவடைந்துள்ள நிலையில் யேமன் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.

No comments

Powered by Blogger.