Header Ads



ஜனாதிபதி மைத்திரி எங்கே..? சகோதரரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை (வீடியோ இணைப்பு)

-gtn-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது சகோதரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 26ம் திகதி ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன கோடரித் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நண்பர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தனிப்பட்ட முரண்பாடே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறெனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரியந்த சிறிசேனவின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதனை வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருவருக்கும் இடையில் மிக நீண்ட காலமாக கருத்து முரண்பாடு நிலவி வந்தாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சகோதரரை ஊடகங்களில் திட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

30-03-2015 பொலனறுவையில் நடைபெற்ற இறுதிக் கிரியைகளில் மைத்திரிபால சிறிசேன பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, விஜயதாச ராஜபக்ஸ, லக்ஸ்மன் கிரியல்ல , ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் பிரியந்தவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்

முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன, சபாநாயகர் சமால் ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியின் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

முன் ஜென்மத்தில் தாம் செய்த பாவத்தின் காரணமாகவே இவ்வாறான ஓர் சகோதரர் தமக்கு கிடைத்துள்ளார் என கடந்த 2012ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பிரியந்த சிறிசேன பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 28ம் திகதி நாடு திரும்பியிருக்க வேண்டிய ஜனாதிபதி இன்னமும் நாடு திரும்பவில்லை, அவருடன் சென்ற வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் நாடு திரும்பியுள்ளனர்.

இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதனை தவிர்க்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு காலம் தாழ்த்தி நாடு திரும்புவதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். (வீடியோ)

2 comments:

  1. சகோதரனாகவே இருந்தபோதிலும் ஒருவர் தொடர்ந்தும் துஷ்டகுணமுடையவராக இருந்தால் அவரை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் குணம் முன்மாதிரியானதுதான். ஆயினும் மரணமடைந்த பிற்பாடும் கூட அவர் அதனை நீடித்திருக்க வேண்டுமா...?

    இது கொஞ்சம் ஓவர்தான்!

    ReplyDelete
  2. Arasiyalukku vanda annan Enna thambi enna. Pathavi , puhal thaan mukkiyam. Arasiyal oru saakkadai.

    ReplyDelete

Powered by Blogger.