Header Ads



அரசியல் நெருக்கடி முற்றுகிறது - வெளிநாட்டிலிருந்து வருகிறார் சந்திரிக்கா

19 வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சம்மதத்தை பெற முடியும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு ஆரம்பத்தில் ஆதரவு வழங்கிய சுதந்திரக்கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு மற்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களை ஒன்றாக முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இந்நிலையில் 19வது அரசியலமைப்பு திருத்தம் குறித்து நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு காண்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2

இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறி்ப்பிட்ட அரசியலமைப்பு திருத்த யோசனை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒப்புதலின்றி அவர்கள் இறுதி முடிவெடுத்தால், அதனை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் எங்களின் ஆதரவை பெற்று ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு முயற்சித்து வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எங்களை பயன்படுத்தி ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதியளிக்க போவதில்லை எனவும், எங்களது அபிப்பிராயத்தை ஒரு பொருட்டாக கருதாமல் அரசாங்கம் செயற்பட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்களே அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.