Header Ads



உலகில் எங்குமில்லாத, நமது பாராளுமன்றம் - பரீட்சார்த்த முயற்சியில் மைத்திரிக்கு தோல்வியே..!

-நஜீப் பின் கபூர்-

1994ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ தனக்கு முன்னைய ஆட்சிக் காலத்தில் மக்களின் பணத்தைக் கொள்ளை யடித்தவர்களை கொழும்பு காலி முகத்திடலுககு  எடுத்துவந்து அவர்களைத் தோல் உறிப்பதாகச் சொல்லி இருந்தார். தோல் உறிக்கமாட்டார்- அப்படிச் செய்யவும் முடியாது அத்துடன் அவர் அப்படிச் செய்யக் கசாப்புக் கடைக்காரரும் இல்லை என்பது எமக்குத் தெரிந்தாலும். 

குறைந்த பட்சம் அவர்களுக்கு எதிரான நீதிமன்றத்தில் ஒரு முறைப்பாட்டையேனும் அவரது ஆட்சிக்காலத்தில் காலத்தில் அவர் எங்கும் செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் ஆட்சி மாற்றங்களினால் நடக்கப்போவது ஒன்றுமில்லை நடந்தது எதுவுமில்லை எல்லாம் பழங்கதை அரசனை நம்பி புருஷனையும் இளைவரசியை நம்பி என்று நாம் முன்வைக்கின்ற புதுக்கதை போல்தான் இந்த நாட்டில் அரசியல் பயணம் போய்க் கொண்டிருக்கின்றது.

போலி ஆவணங்கள், போலிப் பெயர்களில் வங்கிக் கணக்குகள், சட்டவிரோத நீதி மோசடிகள் என்று உள்ளங்கை நெல்லிக்கனிபோன்று எண்ணற்ற விடயங்கள் பகிரங்கமாக இருந்தாலும் அந்தக் குற்றவாலிகளைப் பாதுகாக்கின்ற வேலைகளில் தற்போது ஆளும்தரப்பிலுள்ளவர்கள் ஈடுபட்டு வருவதை நாம் கடந்த பல கட்டுரைகளில் சொல்லி இருந்தோம்.

கள்வன் அதோ இருக்கின்றான் இதோ இருக்கின்றான் ஆளைப் படிக்கப்போகின்றோம் கூட்டில் அடைக்கப்போகின்றோம் என்பது எல்லாம் வெறும் கூப்பாடுகள் மட்டுமே என்பது மக்களுக்குத் தற்போது நன்றாக புரிந்திருக்கின்றது. கள்ளனைப் பிடிப்பதற்குள் கள்ளாகக் காட்டப்பட்டவன் ஆட்சி பீடமேறி பிடிக்கப்போனவளை வளைத்துப் பிடிக்கின்ற நேரமும் வந்த விட்டதோ என்று என்னும் அளவுக்குத் தற்போது காரியங்கள் அரங்கேரி வருகின்றது.

மைத்திரி - ரணில் நல்லாட்சியில் பல ஆரோக்கியமான விடயங்களும் நடந்திருக்கின்றன பொதுமக்களுக்கு இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் சலுகைள், அரச ஊழியர்களுக்கு மிகப் பெரிய சம்பள அதிகரிப்பு, போன்றவை மக்களுக்கு அன்றடம் உணரக்கூடிய  சலுகைகளாக இருக்கின்றது.

100 நாள் நல்லாட்சியில் சிறுபான்மை ஐக்கிய தேசியக் கட்சி அரசு அதன் பெரும்பான்மைக் காலப் பகுதியை அதாவது ஏறக்குறைய 60 நாள்களைக் கடத்தி இருக்கின்ற நிலையில் தற்போது கூட்டாச்சி என்ற ஒன்று இன்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரை இந்த சுதந்திரக் கட்சிக்காரர்களைத் சேர்த்துத் தற்போது அமைக்கப்பட்டிருக்கின்ற கலப்பு அரசு  நாட்டில் தற்போது காணப்படுகின்ற மஹிந்த அரசியல் கொதிப்புக்கு எறியப்பட்ட ஐஸ் பக்கட் என்று தான் நோக்க வேண்டி இருக்கின்றது.

இந்தக் கட்டுரை பிரசுரமாகின்ற நேரம் 100 நாள் நல்லாட்சியில் சரியாக 75 நாள் நிறைவடைந்திருக்கும். எனவே சொல்லுகின்ற படி ஏப்ரல்23ல் ஆட்சியைக் கலைப்பதானால் இன்னும் எஞ்சி இருப்பது 25 நாட்கள் மட்டுமே. எனவே 25 நாட்களுக்கு எதற்hக கூட்டாச்சி என்றும் கேட்கலாம். இதிலுள்ள நியாயம் அவர்கள் பக்த்தில் இருக்கின்றது. சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசு எவ்வளவு நாளைக்கு உயிர் வழமுடியும் என்ற சந்தேகம் தோன்றி இருந்த நிலையில் அதன் ஆயுலை  இன்னும் சற்று நீடித்துக் கொள்ள எடுத்த ஒரு நடவடிக்கையாகவும் இதனை நாம் பார்க்க முடியும். 

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இந்த 100 நாட்களுக்குள் தனக்கு வேண்டிய விடயங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அவற்றை சட்டமாக்கிக் கொள்ள முனைந்தது. ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதில் ஆர்வம் காட்டுகின்ற ரணில் தரப்பு தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்று ஆர்வமில்லத நிலையில் இருந்தது. 

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே நாம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கின்ற விடயத்தில் சாதகமாக பதிலாளிக்க முடியும் என்று சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்கள் ரணிலுக்குச் சிவப்புக் கொடி காட்டி விட்டார்கள். எனவே ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்ளவும் இருதரப்பு புரிந்துணர்வுகளுடன் இன்னும் சில காலதிற்குப் பயணிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இந்த சர்வகட்சி அரசு விடயத்தில் மைத்திரி ஆர்வமாக இருந்தார் என்பதுதான் உண்மை. என்றாலும் நடைமுறையில் இந்த சர்வகட்சி அல்லது ஐ.தே.க - சு.கட்சி அரசு நெடுநாள் உயிர் பிழைக்காது என்பது எமது கருத்து.

இதனை உறுதிப்டுத்துகின்றவகையில் தற்போது காரியங்கள் நடந்து வருகின்றது. கட்;சிக் கட்டுப்பாடுகளையும் மீறி இரத்தினபுரி மஹிந்த விசுவாசிகள்  கூட்டத்தில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் போய் கலந்து கொண்டிருக்கின்றார்கள். மேலும் இந்த அரசில் அமைச்சுக்கள் கிடைக்காத பலர் சுதந்திரக் கட்சி கூட்டரசைத் தற்போது பகிரங்கமாக விமர்சித்து வருகின்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தானும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பது குறித்து சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் ஜோன் செனவிரத்னவிடம் குறிப்பிட்டிருந்தாலும் அவர் கூட்டத்திற்குப் போவதைத் தவிர்த்திருக்கின்றார்.

தற்போது நாட்டில் எதிர்க் கட்சியொன்று இல்லாத நிலை காணப்படுவதால் சுதந்திரக் கட்சியின் மஹிந்த விசுவாசிகள் மற்றுமொரு காய் நகர்த்தலை மேற் கொண்டு வருகின்றனர்.

தினேஷ் குனவர்தனவை இந்த எதிர்க் கட்சி தலைவர் பதவிக்கு அமர்த்துவதற்காக அவர்கள் தற்போது 50 பேரின் கையொப்பம் சேகரிக்கின்ற வேலையில் இறங்கி இருக்கின்றார்கள். இந்தக் கையொப்பங்களைப் பெற்று அவர்கள் சபாநாயகரிடம் தமது கோரிக்கையை விடுக்க இருக்கின்றார்கள்.

எனவே ஜனாதிபதி மைத்திரிக்குத் தலையிடி கொடுக்கின்ற நடவடிக்கைகள் தற்போது பல கோணங்களில் இருந்தும் முடக்கி விடப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டில் கொந்தளிப்பான அரசியல் நிலை தோன்றும். இந்த நிலை உருவாகும் என்பதனை நாம் மைத்திரி வெற்றி பெற்று ஒரிரு வாரங்களில் சொல்லி இருந்தோம் அமெரிக்க இராஜதந்திரிகள் கடந்த புதன் கிழமை இலங்கையில் கொந்தளிப்பான நிலை விரைவில் தோன்றும் என்று தற்போது குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நாம் வழக்கமாக சொல்லி வருகின்ற ஒரு கணிப்புத்ததான் மைத்திரி பெற்ற 62 இலட்சம் வாக்குகளை விட ராஜபக்ஷ பெற்ற 57 இலட்சம் வாக்குகள் வீரியம் கூடியது. மைத்திரி பெற்ற இந்த வாக்குகள் பொரும்பாலானவை அவருக்குச் செந்தமில்லாதவை எனவே ராஜபக்ஷ பெற்ற 57 இலடசம் வக்காளர்களில் பல்லாயிரக் கணக்கானவர்களை அவருக்கு தொடர்ந்தும் தனது தேவைகளுக்காக வீதிகளில் இறக்கவோ கூட்டங்களுக்கு அழைத்து வரவோ கூப்பாடு போடவோ வைக்க முடியும். அவர்கள் அவர் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்கள். எனவே இந்த வேலையை மைத்திரியால் செய்ய முடியாது. எனவே எமது கள ஆய்வின் படி மைத்திரி ஜனாதிபதியாக இருந்தாலும் அரசியல் களத்தில் அவர் பலயீனமாகவே தற்போது இருந்த வருகின்றார். 

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்ற விடயம், மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்களைக்கு குறைக்க ஜனாதிபதி மைத்திரி தயாராக இருந்தாலும் அரசியல் கட்சிகள் இந்த அதிகாரங்களைக் குறைக்கின்ற விடயத்தில் தமக்குள் முறண்பாட்டு வருகின்றது. தேர்தல் முறையில் மாற்றங்கள் என்று விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆர்வமில்லாது இருந்து வருகின்றது. 

இன்றைய அரசியலை போக்கில் மக்கள் மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கின்றார்கள். ராஜபக்ஷவை அரசியலில்; இருந்து வெளியேற்ற காட்டிய ஆர்வம் தற்போது இந்த ஆட்சியை பாதுகாக்கின்ற விடயத்தில் இல்லாமல் இருக்கின்றது. அரசியல் செயல்பாட்டாளர்கள் தற்போது இந்த அரசைக் கைவிட்டிருக்கின்றார்கள். மைத்திரியை பதவிக்குக் கொண்டவர முக்கிய பங்களிப்பு வழங்கிய சோபிததேரர் கூட இந்த அரசின் நடவடிக்கைகளைத் தற்போது பகிரங்கமாக விமர்சிக்கின்றார்கள். இது மிகவும் ஆபத்தனா ஒரு நிலை என்று நாம் கருதுகின்றோம். 

தற்போது சுதந்திரக் கட்சி ஆளும் தரப்பிலும் எதிரணியிலும் இருந்து செயலாற்றுவது பெரும் குழப்பமாக இருக்கின்றது. நிமல் சிரிபால டி சில்வா எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஏற்றிருக்கின்றபோது. நாம் முன்பு சொன்ன படி  தற்போது தினேஷ் குனவர்தனவை அந்தப் பதவிக்கு நியமிக்க எடுக்கின்ற முயற்சியில் கட்சி தற்போது சுதந்திரக் கட்சி இரண்டு குழுக்களாகப் பிரிந்து செயலாற்றுவதை அவதானிக்க முடிகின்றது. எனவே தற்போது மைத்திரிக்கு மக்கள் வழங்கிய ஆணை கேளிக் கூத்தாக்கப் போய்க் கொண்டிருப்தை அவதானிக்க முடிகின்றது

எனவே மைத்திரி பரீட்சார்த்த அரசியல் முயற்சிகள் நல்ல திட்டங்களாக இருந்தாலும் தன்னலத்தை மையப்படுத்தி அரசியலை முன்னெடுக்கின்ற ஒரு கலாச்hரத்தைப் பின்பற்றிகின்ற அரசியல்வாதிகள் முன்னால் இது வெற்றிபெற மாட்டது. என்று உறுதியாகக் குறிப்பிடலாம். இலங்கை அரசியலில் மைத்திரி இன்று இருதலைக் கொல்லி எறும்பின் நிலையிலதான் இருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரியை பொறுத்தவரை அவர் மிகவும் மொன்மையான ஒரு மனிதர் நாட்டை ஒரு நல்ல வழிக்கு எடுத்துச் செல்வதற்று அவர் மிகவும் எளிமையாக நடந்து கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது. என்றாலும் அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு பல பிரிவுகளில் இருந்தும் முட்டுக்கடைகள் போடப்பட்டு வருகின்றது.

தற்போது 60 க்கும் மேட்பட்ட சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகின்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்று களத்தில் இறங்க இருக்கின்றார்கள் என்ற தெரியவருகின்றது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பெரும் எண்ணிக்கையான (29) பாராளுமன்ற உறுப்பினர்கள் இரத்தினபுரிக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அடுத்து வரும் கூட்டங்களில் இது மேலும் அதிகரிக்க இடமிருக்கின்றது என்பது எமது கருத்து. 

தற்போது மைத்திரிக்கு விசுவாசம் தெரிவிக்கின்ற பலரும் அவரிடமிருந்து விலகி மஹிந்த அணியில் போய் சேர்வதற்று அதிக வாய்ப்புக்கள் இன்று காணப்படுகின்றது. எனவே இரத்தினபுரிக்  கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லாத விடயம்.

No comments

Powered by Blogger.