Header Ads



துண்டாக முறிந்து விழுந்த கையை பொருத்தி, கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி மருத்துவர்கள் வெற்றி


துண்டாக முறிந்து விழுந்தகையை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் பொருத்தும் முயற்சியில், முதன்முறையாக கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி மருத்துவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

பதினைந்து வயதான சிறுவன் ஒருவனுக்கு, ஏழுமணி நேரம் மேற்கொண்ட சத்திரகிசிச்சையின் பின்னர் அவர் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த வியாழக்கிழமை சிறுவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கம்பஹா, வலுவுவித்தவைச் சேர்ந்த ஒஸ்காட மகுசங்க என்ற சிறுவன், கிரிந்திவெலவில் நடைபெற்ற பஸ் விபத்தில் தனது முன் கையை இழந்தார். 
கம்பஹா அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட சத்திரகிசிச்சை வெற்றி அளித்து சிறுவனது முன் கை பொருத்தப்பட்டுள்ளது. அவர் இப்போது சுகமடைந்துள்ளதாக தேசிய ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதிப்புற்ற சிறுவன் பயணம் செய்த பேருந்தை, அதன் பின்னால் வந்த பஸ் வண்டி முந்திச் செல்வதற்கு கடும் வேகமாக ஓடியதனாலேயே விபத்து நடைபெற்று, முன் கை துண்டிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

No comments

Powered by Blogger.