Header Ads



கோத்தபாய ராஜபக்ச தப்பிச்செல்ல முயற்சி...? ஆடம்பர படகு பிடிபட்டது

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, காலி துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக மாலைதீவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆடம்பர படகொன்றின் மூலம் இன்று 13-03-2015 அதிகாலை 3.30 அளவில் அவர் இவ்வாறு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

கோத்தபாயவுக்கு நெருக்கமான ஒருவர் படகை வழங்கியுள்ளதாக த இண்டிபென்டன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

காலி துறைமுகத்திற்கு அருகில் கடலில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு வேகமாக படகொன்று செல்வதை கண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் அது பற்றிய தகவலை கடற்படையினருக்கு வழங்கியுள்ளார்.

இதனையடுத்து படகை விரட்டிச் சென்ற கடற்படையினர் அதனை நிறுத்தியுள்ளனர். படகு உரிமையாளரின் கைபேசியை பரீட்சித்து பார்த்த போது, அவர் பிடிப்படுவதற்கு 10 வினாடிகளுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அழைப்பை ஏற்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு முன்னரும் கோத்தபாயவுக்கு அவர் பலமுறை அழைப்பை எடுத்திருந்தார். கோத்தபாயவுடன் அவருக்கு நெருக்கமான 15 பேர் இந்த பயணத்தில் இணைந்து கொள்ளவிருந்தாக தகவல்கள் கூறுவதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

4 comments:

  1. இந்தச் செய்தி மாத்திரம் உண்மையானால் இவரைப்போன்ற நீசர் இருக்க முடியாது.

    ஏனெனில் சில நாட்களுக்கு முன்புதான் எத்தகைய விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தாலும் தான் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லப்போவதில்லை என்று ஜம்பமடித்திருந்தார்

    ReplyDelete
  2. இவர் மட்டுமா அப்படி சொன்னார், தேர்தல் முடிந்ததும் பசில் என்ன சொன்னார்? நான் நாட்டை விட்டு ஒருபொழுதும் வெளியேற மாட்டேன் என்று சொல்லி, சொன்ன ஈரம் காய்வதற்குள் அமெரிக்கவிற்கு எஸ்கேப் ஆனார்.

    ReplyDelete
  3. eppa iwara pidiththu ulla poduwathu

    ReplyDelete

Powered by Blogger.