Header Ads



ஈரானியர்கள் 80 இலட்சம் பேரின் பேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது

சமூக வலைதளமான முகநூலில் (பேஸ்புக்) 80 லட்சம் ஈரானியர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அந்த நாட்டு ராணுவம் கண்காணித்து வருவதாக அரசு செய்தி நிறுவனம் ஐ.என்.ஆர்.என்.ஏ. திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்தச் செய்தி நிறுவனம் கூறியதாவது:

ஈரான் ராணுவத்தின் இணையதளக் குற்றத் தடுப்புப் பிரிவு, முகநூல் சமூக வலைதளத்தில் ஈரானைச் சேர்ந்த 80 லட்சம் பயன்பாட்டாளர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

அந்த இணையதளத்தில் ஆபாசமான பதிவுகளை வெளியிட்டு வந்ததாகவும், போலியான பெயர்களில் இயங்கி வந்ததாகவும் இரு இளைஞர்களை அந்த அமைப்பு கைது செய்துள்ளது என அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

No comments

Powered by Blogger.