Header Ads



தேர்தல் சீர்திருத்தம் 6 மாதங்கள் தேவை - ஜயம்பதி விக்கிரமரட்ண

அரசின் நூறு நாள்கள் வேலைத்திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள தேர்தல் சீர்த்திருத்தங்கள் மற்றும் அரச ஆட்சி அமைப்பு முறைமாற்றம் ஆகிய அரசமைப்பு திருத்தங்களை ஒரேகணத்தில் நடைமுறைக்கிடவேண்டும் எனச் சிலதரப்பினர் கோருகின்றனர். 

இதில் இணக்கம் காணப்பட்டால் நன்மையே. ஆனால்,  நிறைவேற்று அதிகாரமுறைமையை இல்லா தொழித்தலை உள்ளடக்கிய தான 19ஆவது திருத்தத்தை நடை முறைப்படுத்துவதற்கான முன் நிபந்தனையாகத் தேர்தல் சீர் திருத்தங்களைக் கோருவது தவறானவிடயம் எனத்தாம் கருதுவதாக பிரபல அரசமைப்பு சட்டத் தரணியும் தற்போதைய அரசமைப்பு திருத்தங்களை வரையும் குழவில் முக்கிய வகிபாகத்தை ஆற்றிவருபவருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவிக்கின்றார்.

தற்போதைய நிலையில் அரச ஆட்சி அமைப்புமுறையில் மாற்றங்களைக் கொண்டுவருதல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் கொண்டு வருதல் ஆகிய விடயங்களைத் தாங்கிய 19ஆவது திருத்தத்திற்கு அரசிலுள்ள அனைத்துக் கட்சிகள் மத்தியிலும் பூரணகருத் தொருமைப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் சீர்திருத்தங்களைத் தாங்கிய 20ஆவது திருத்தத்தொடர்பில் இன்னமும் போதிய இணக்கப்பாடு ஏற்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் சீர்திருத்தங்களை மேற் கொள்வதற்கு தனது கணிப்பில் இன்னமும் ஆகக்குறைந்தபட்சம் ஆறு மாத காலப் பகுதிசெல்லக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.