Header Ads



நாட்டின் பிரதான 60 ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதி

பிரதான ரயில் நிலையங்கள் 60 இற்கு இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (30) தொடக்கம் இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்தவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஏனைய 60 பிரதான ரயில் நிலையங்களுக்கும் இலவச Wi-Fi வசதிகளை பெற்றுகொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரயில்வே திணைக்களம், இலங்கை தகவல் தொழிநுட்ப நிலையத்தினுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. வேலையில்லாத வெட்டிப் பசங்கள் எல்லாம் ஸ்மார்ட் போனை தூக்கிக் கொண்டு பிளாட்பாரத்தில் குடியிருக்க வராமல் இருந்தால் சரிதான்.

    ReplyDelete

Powered by Blogger.