Header Ads



தினமும் 50 முறை, தூங்கும் பெண்

தினமும் 50 முறை தூங்கும் வியாதியால், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனின், லங்காஷயர் நகரை சேர்ந்த, ஜாக்கி லாயிட், எப்போது தூங்குவார் என்பது தெரியாது. 'நார்கோலெப்சி' என்னும் தூக்க நோய்க்கு உரிய மருந்து பலனளிக்காததால், சுயமாக மருத்துவம் செய்து கொள்ள, அமெரிக்க சுகாதார துறையிடம் அனுமதி கோரினார். ஆனால், பாதுகாப்பற்றது என்பதால், அவருக்கு அனுமதி அளிக்க, சுகாதாரத்துறை மறுத்துவிட்டது. 

இதையடுத்து, தனது 8 மற்றும் 15 வயது குழந்தைகள் குறித்த தகவல்களுடன், தன்னுடைய நிலை குறித்த வீடியோ படம் ஒன்றை, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் ஜாக்கி வெளியிட்டார். அதில், சமையல் கலைஞராக பணிபுரிந்ததாகவும், கத்தியை பயன்படுத்தும்போது, தூங்கியதால், வேலை பறிபோனதாகவும், நிற்கும்போது தூக்கத்தின் காரணமாக கீழே விழுந்து பலமுறை காயமடைந்துள்ளதாகவும், கார் ஓட்டுவதையும் நிறுத்தி விட்டதாகவும் ஜாக்கி கூறியுள்ளார். 

தூக்க வியாதியால் அனைத்தையும் இழந்தாலும், வாழ விரும்புவதாக, ஜாக்கி கூறியுள்ளார். நரம்பியல்கோளாறால் இந்நோய் ஏற்படுவதாகவும், 10-15 வயதிலேயே இதற்கான அறிகுறிகள் தோன்றும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.