Header Ads



35 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பர்ஸ், பேஸ்புக் உதவியால் திரும்ப கிடைத்தது.

இங்கிலாந்தை சேர்ந்தவரிடம் இருந்து திருடப்பட்ட பர்ஸ் 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பேஸ்புக் உதவியால் இப்போது அவருக்கு திரும்ப கிடைத்திருகிறது.

இப்போது 45 வயதாகும் ஜான் ஸ்டீல், 35 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தின் தென் டெவன் பகுதியில் உள்ள ஷால்டான் கிராமத்தில் சிறுவனாக இருந்த போது வீட்டில் வைத்திருந்த அவருடைய பர்ஸை ஒருவன் திருடி சென்றுவிட்டான். ஜானும் அதை மறந்துவிட்டார். அந்த பர்ஸில் ஒரு 1 பவுண்ட் நோட்டும் அவருடைய 10 வயது சிறிய புகைப்படமும் அதில் பெயரும் எழுதப்படிருந்தது.

தற்போது அதே பகுதியில் வசிக்கும் ஷெல்லி டேவிஸ் என்ற பெண் தன்னுடய வீட்டில் பராமரிப்பு வேலை மேற்கொண்டிருந்த போது அதே பர்ஸ் கிடைத்துள்ளது. அதை திரும்ப உரிமையாளரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார் ஷெல்லி டேவிஸ். அதன்படி புகைப்படத்தில் உள்ள பெயரைக்கொண்டு சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தேடியுள்ளார். ஜானும் அதே பெயர் முகவரியுடன் பேஸ்புக்கில் இருந்துள்ளார். அவரை தொடர்பு கொண்ட ஷெல்லி டேவிஸ், அவரிடம் பர்ஸை ஒப்படைத்துள்ளார்.

இதனால் நெகிழ்ந்து போன ஜான், ‘இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அந்த பர்சில் இருந்த ஒரு பவுண்ட்டை வைத்து என்ன செலவு செய்திருப்பார் என்றுதான் தெரியவில்லை’ என்று கூறினார்.

No comments

Powered by Blogger.