Header Ads



நாளை முதல் இலவசமாக இன்டர்நெட் பார்க்ககூடிய 26 இடங்கள் (முழு விபரம் இணைப்பு)

இலங்கையில் நாளை முதல் 26 பொது இடங்களில் வைபை (WIFI) இணையத் தொடர்பு வசதிகளை பெறமுடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத அளவில் சுமார் 1000 பொது இடங்களுக்கு வைபை இணையத்தொடர்பு வசதிகளை பெறமுடியும் என்று தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் வைபை இணையத்தொடர்பை நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஆறு அமைச்சர்கள் கொழும்பு ரயில்வே நிலையத்தில் இந்த சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

இந்த ஆரம்ப வைபவம் யாழ்ப்பாணம், பொலநறுவை, மாத்தறை ரயில்வே நிலையங்களிலும் பஸ் தரிப்பிடங்களிலும் பாரிய திரைகள் மூலம் காணப்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை நாளை முதல் வைபை இணையத்தொடர்பை பெறவுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோட்டை ரயில்வே நிலையம், புறக்கோட்டை பொது மற்றும் தனியார் பஸ் நிலையங்கள், கண்டி தலதா மாளிகை, புறக்கோட்டை மிதக்கும் சந்தை, கொழும்பு சட்டக்கல்லூரி, கொழும்பு பொதுநூலகம், லிபர்ட்டி பிளாஸா, கொழும்பு ரேஸ்கோஸ், பொலிஸ் தலைமையகம், காலி ரயில்வே நிலையம், யாழ்ப்பாண ரயில்வே நிலையம், கோட்டை டச் ஹொஸ்பிட்டல், காலிமுகத்திடல், பத்தரமுல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம், கொழும்பு நூதனசாலை, கராப்பிட்டிய வைத்தியசாலை, இரத்தினபுரி நூதனசாலை, பொலநறுவை தள வைத்தியசாலை, மாத்தறை பஸ் நிலையம், பொலநறுவை ரயில்வே நிலையம், மாத்தறை ரயில்வே நிலையம், மிரிஜ்ஜாவில தாவரவியல் பூங்கா, யாழ்ப்பாண பொது நூலகம், கண்டி ரயில்வே நிலையம், பேராதனை ரயில்வே நிலையம் என்பனவே அந்த 26 இடங்களாகும்

3 comments:

  1. What about trinco batti kalmuai and amparai

    ReplyDelete
  2. Wait and you would get, everybody was with fear for 09 years and now we got freedom an in a hurry for everything..

    ReplyDelete

Powered by Blogger.