Header Ads



முஸ்லிம் பாடசாலையில், தமிழ் விரிவுரையாளரின் முன்மாதிரி...

-மு.இ.உமர் அலி-

யாழ்ப்பாணம்.கோப்பாய் ஆசிரியர்  பயிற்சிக்கல்லூரியில்  V.குணசீலன்   B.Sc எனும் ஆசிரியர்   ஒரு சிரேஸ்ட விரிவுரையாளராக  இருக்கின்றார். அவர் யாழ்  மாவட்டத்தில் பிரபலமான ஒரு உயிரியல் பாட  போதனாசிரியரும்கூட. நிந்தவூர் அல் அஷ்ரக்  தேசிய பாடசாலையின் பழைய மாணவர்  ஒருவர்  கோப்பாய்  ஆசிரியர்  கலாசாலையில்  தற்போது பயிலுனராக இருக்கின்றார்.

தான் கற்ற பாடசாலைக்கு மேலும் பல நன்மைகளை செய்யவேண்டுமென்று விரும்பிய  அந்த ஆசிரியர் மேற்படி விரிவுரையாளரை  அணுகி தமது பாடசாலையின் விஞ்ஞான  பிரிவு மாணவர்களுக்கு  ஒரு கருத்தரங்கு  நடாத்த வருகை தரவேண்டும்.அதற்குரிய கொடுப்பனவு,போக்குவரத்து செலவை  நாங்கள் வழங்குவோம் என்று  கூறியிருக்கின்றார்.

இதற்குச் செவிசாய்த்த  அந்த விரிவுரையாளர்.கடந்த 16 ஆம்திகதி  திங்கட்கிழமை  இங்கு வருகை தந்து இம்முறை உயர்தரப் பரீட்சை எழுத இருக்கின்ற உயிரியல்பிரிவு  மாணவர்களுக்கு   உயிரியல்பாடத்தில் அலகு 7,அலகு 9 இனை கற்பித்திருக்கின்றார்.

முடிவில்   கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள மறுத்த அவர்  ,இந்தப்பாடசாலையில்  விஞ்ஞானப்பிரிவு மாணவர்களின் தேவைக்கு பயன்படுத்துங்கள் எனக்கூறி தனது  சொந்தக்காசோலையில் ரூபாய் ஐயாயிரம் தொகையை எழுதிக்கொடுத்திருக்கின்றார்.அத்துடன் பரீட்சை நெருங்குகும் வேளையில் இப்பிரதேச மாணவர்களுக்கான ஒரு மீட்டல் வகுப்பினையும் இப்பாடசாலையில்  முழுநாள் நடாத்துவதற்கு உடன்பட்டுள்ளார்.

இவ்வாறான ஆசிரியப்பெருந்தகைகளும்  எமது நாட்டில்  உள்ளனர்.
இவ்வாசிரியரும்,இவ்வாசிரியரை அழைத்துவந்த  தமிழ் பாட ஆசிரியர்.Y,L.அஷ்ரப்அவர்களும்  பாராட்டப்பட வேண்டியவர்கள்.

4 comments:

  1. Mr.gunaseelan sir ,you are so generous thank u for you service and god bless u

    ReplyDelete
  2. Thanks for your help mind

    ReplyDelete
  3. Dear Mr.Gunaseelan, Thank you Sir. God will reward you.

    ReplyDelete
  4. We Muslim community sincerely thank you Sir

    ReplyDelete

Powered by Blogger.