Header Ads



முஸ்லிம் வீடுகளுக்கு மஹிந்த திடீர் விஜயம், பகலுணவும் உண்டார், ஒத்துழைப்பையும் கோரினார்

பேருவளை சீனன் கோட்டை க்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று 3 ஆம் திகதி விஜயம் செய்தார். மேல் மாகாணசபை முன்னாள் உறு ப்பினரும் முன்னாள் பேருவளை ஸ்ரீ. ல. சு. கட்சி பிரதம அமைப்பாளருமான மர்ஹும் எம். எஸ். எம். பளீல் ஹாஜியாரின் இல்லத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிப தியை பளீல் ஹாஜியாரின் புதல்வர் அல்-ஹாஜ் அஸாம் பளீல் வரவேற்றார்.

முன்னாள் ஜனாதிபதியின் வருகை பற்றி கேள்வியுற்ற மக்கள் பளீல் ஹாஜியாரின் இல்லத்தை நோக்கிச் சென்று அவருடன் சுமுகமான முறையில் கலந்துரையாடினர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பேருவளை நகர பிதா மில்பர் கபூர், முன்னாள் நகர பிதா மர்ஜான் அஸ்மி பளீல், மற்றும் பளீல் ஹாஜியார் குடும்பத்தினர் தனக்காக பாடுபட்டதை முன்னாள் ஜனாதிபதி நன்றியுடன் நினைவுகூர்ந்தார். எதிர்காலத்திலும் பளீல் ஹாஜியார் குடுத்பத்தினதும் பேருவளை மக்களினதும் பங்களிப்பு தனக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வக்பு சபை முன்னாள் தலைவர் அல்-ஹாஜ் அஹ்கம் உவைஸின் இல்லத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பகலுணவை உட்கொண்டார்.

அஸ்ஸெய்யித் அப்துல் காதர் மசூர் மெளலானா உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

12 comments:

  1. கன்கெட்டபின் சூரிய நமஸ்காரம்.

    ReplyDelete
  2. Very late Mr Rajapakse
    You missed the bus
    we are hurt
    If you had put Gnanasara behind bars immediately after the Aluthgama racial incidents you would have won and continue robbing
    Panadura Nolimit, Fashion bug
    If those your or your henchmen what would have been our state

    ReplyDelete
  3. மக்களே மறக்க கூடாது எதனையும் பேருவலயில் நடந்த கொடுமைகளை இவரும் இவரின் தம்பியும்தான் காரணம் நடந்த சம்பவத்திற்க்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதனையும் நினைவில் வைத்துக்கொள்ளவும் முதலில் இவருக்கு ஆதரவு வழங்க முன்பு. நாம் ஒன்றையும் மறக்கவில்லை இன்னும் காயத்தின் வடுக்கள் இன்னம் ஆரவில்லை

    ReplyDelete
  4. He should have accompanied BBS General Secretary also.

    ReplyDelete
  5. Maanam ketta makkal, evvalavu pattalum thiruntha maattingada

    ReplyDelete
  6. "கெளம்பிட்டாண்டா கெளம்பிட்டான்......!!!!!!! "

    "..யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.."

    மக்களே விழித்திருங்கள். இனியும் தூங்க வேண்டாம்.

    ReplyDelete
  7. We Muslims, If we are "TRUE MUSLIM", we follow the saying of prophet Muhammed (pbuh) strictly.

    The saying is " A Muhmeen will not fall into the same pit 2nd time"

    if we are ready fall into the same pit of Mahindas Arrogant and Racist approached toward Muslims via BBS, we will not fit to above statement of our beloved prophet.

    Please spread this ... to believing and practicing Muslims.

    ReplyDelete
  8. பொது பல சேனாவை உள்ளே வைப்பேன் என்று எழுத்து மூலம் வாக்குறுதி தர சொல்லவும் அதற்க்கு பின்னர் யோசிக்கலாம் ஒத்துழைப்பதைப்பற்றி. அடிப்பட்டும் மீண்டும் உங்களுக்கு ஆதரவு வழங்க நாம் ஒன்றும் இழித்தவாயில்லை

    ReplyDelete
  9. ஒன்று மட்டும் நிச்சயம் என்னவென்றால் இவர் ஆட்சிக்கு வந்தால் நாம் எல்லோரும் மண்ணை திண்டு மழைத்தண்ணீரை குடிக்கவேண்டி வரும்

    ReplyDelete
  10. IVARUDAIYENADAGAM INIMEL PALIKKATHU, INTHE NADDUKKU IWAR THEVAYILLATHE NAPAR, INIYUM INTHE NALLATCHIYAI KULAIKKAWA THIDDAM PODUHIRARPODUHIRAR, IRAIWAN POTHUMANAWAN

    ReplyDelete
  11. நமது கழுத்தைப் பிடிப்பது.. கைதவறி விழுந்துவிட நேர்ந்தால் காலைப்பிடிப்பது. எழுந்திருக்க சக்தி கிடைத்து விட்டால் மீண்டும் கழுத்தைக் குறிவைப்பது....

    என்று நமது குரல்வளையை நெரிக்கும் வரை இவரைப்போன்றவர்களின் நடவடிக்கைகள் இப்படியேதான் இருக்கப்போகின்றது.

    ஆனால், நமக்குக் கழுத்து மட்டுமல்ல, அதற்கு மேலிருக்கும் மண்டையோட்டினுள்ளே மூளை, மூளை என்று ஒரு அங்கமும் உள்ளது. அதை இவ்வாறானவர்களுக்கு தேர்தலில் நிரூபித்து விட்டாயிற்று. ஆயினும் தொடர்ந்து உசாராகவே இருக்க வேண்டும்.

    அதுசரி, ஒரு சந்தேகம்:

    இத்தகையோருக்கு ஆதரவும் தந்து விருந்தும் வழங்கும் சுரணையற்ற நம்மவர்கள் இவரிடம் இனிமேலாவது அவர் விட்ட தவறை எடுத்துச் சொல்வார்களா அல்லது இப்பொழுதும் வெறும் ஜால்ராதான் அடிப்பார்களா..?

    ReplyDelete
  12. dear aluthgama martyrs. your sacrifices are not in vain. we are enjoying the peace with your families. see the main culprit begging for muslim votes. allahu akbar.

    ReplyDelete

Powered by Blogger.