Header Ads



கடைசி வரையும், நான் விடப் போவதில்லை - ஜெமீல்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரான ஏ. எம். ஜெமீல் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் கருத்துகளைப் பறிமாறினார். பல விடயங்கள் அவரால் கூறப்பட்டது. இருப்பினும் கட்சியின் நலன் கருதி நான் சில விடயங்களை தணிக்கை செய்து கொள்ள விரும்புகிறேன்.

அவர் கூறிய சில விடயங்களை மட்டும் இங்கு பதிவிடுகிறேன்.

1.ஹாபிஸ் நஸீரை கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவு செய்வதற்கான இணக்கக் கடிதத்தை முதலில் வழங்கியவர் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம். அவர் நேற்றுக் காலை 6.30 மணிக்கு அமைச்சர் ஹக்கீம் அவர்களின் வீட்டுக்குச் சென்று தனது இணக்கக் கடிதத்தை கையளித்திருந்தார்.

2. வடமாகாண சபையின் முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் போன்று நன்கு படித்த பெறுமதியான மனிதர் ஒருவரே கிழக்கு மாகாண சபை முதல்வராக நியமிக்கப்பட வேண்டுமென்று கல்முனை மாநகர சபை மேயரான நிஸாம் காரியப்பர் அண்மையில் என்னிடம் தெரிவித்தார். அவர் கூறியது எனது மனதை மிகவும் பாதித்தது எனவே, அவரும் இந்த விடயத்தில் பின்புலனாக இருந்து செயற்பட்டவர்.

3. தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் எமது கட்சியின் முக்கியஸ்தர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனக்கு பல அழைப்புகள் வந்தன. நான் அவற்றை நிராகரித்தேன்.

4. ஹாபிஸ் நஸீரை முதலமைச்சராக்கி கிழக்கு மாகாண சபையின் நிர்வாகம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதனை நீங்கள் இருந்து பாருங்கள். கடைசி வரையும் நான் விடப் போவதில்லை என்றும் ஜெமீல் என்னிடம் தெரிவித்தார்.

ஜெமீல் கூறிய அனைத்து விடயங்களும் என்னால் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அசாதாரண நிலைமைகள் தோற்றுவிக்கப்பட கூடாது என்ற அடிப்படையில் பல விடயங்களை வெளியிடுவதனை தவிர்த்துக் கொள்கிறேன்.

14 comments:

  1. This SLMC and its current members are only about the money and power ,this is toatlly unacceptable ,we are getting ready to handle this soon
    Mohamed sahfi

    ReplyDelete
  2. All politician are wants just their post and but their not work for community after win election, Jameel is one of the elders membership politician in SLMC but his character is not good, he has done lot of wrong things in past. All communities are know about him very well in this area. my opinion is better for chief minister post to give Ariff samsudeen, he's the one of the honest person in this area but he is new for SLMC not for politic. his family was in politic always. anyway chief minister choice is wrong person Hafiz Nazeer Ahamed .its the weakness of leader Abdul Rauff Hakeem

    ReplyDelete
  3. திரு. நிசாம் காரியப்பர் இந்த குற்றச்சட்டுக்களுக்கு நிட்சயம் பதில் கூற வேண்டும்.

    திரு. ஜெமீல் அவர்களே நீங்கள் அமைதியாகவும், பக்குவமாகவும் நாகரிகமாகவும் உங்கள் அரசியல் முன்னெடுப்புகளை செய்ய வேண்டும். நீங்கள் துடிப்புள்ள ஒரு இளம் அரசியல் வாதி. நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. முஸ்லிம்களுக்காக நிறைய சாதிக்க வேண்டியும் உள்ளது. இது ஒரு பக்கம்.

    மறு பக்கம்:

    நீங்கள் இப்படியெல்லாம் கலாட்ட பண்ணி ஒரு பெரும் பேரம் பேசும் சூல்னிலையை உருவாக்கி நல்ல ஒரு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று நாடகம் ஆடாதீர்கள். நீங்கள் தலைமைக்கு ஒத்துழைக்காமல் நடப்பது, தலைமையை பலவீனப்படுத்துவைதையே காட்டுகிறது. தலைமை நினைத்தால் உங்களை தூக்கி வீசிவிட்டு உங்கள் ஊரில் இருந்தே வேறு ஒருவரை கொண்டு வர முடியும். நீங்கள் போடும் ஆட்டம் முஸ்லிம்களையும், முஸ்லிம் காங்கிரசையும் ( பிற சமூகத்திலும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ) சங்கடத்தியும் தலை குனிவையும் ஏற்படுத்தி உள்ளது.

    ReplyDelete
  4. இன்னமும் பிரதேசவாத சாக்கடைக்குள் தான் மூழ்கிப் போயுள்ளது நமது சமுகம், கிழக்கு மாகாணம் அதனுள் பிரதேசவாத வெறியுடன் திருகோணமலை என்றும் மட்டக்களப்பு என்றும் அம்பாறை என்றும் பதவிக்காய் பிரிந்து கிடக்கும் நம் சமுகம் எப்போது திருந்தும்? பிரதேசவாதத்தில் ஊறிப்போன பழைய பஞ்சங்களான அரசியல் வாதிகள் அவர்கள் சமுகத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கியது மல்லாமல் அடுத்த தலைமுறைக்கும் தமது விஷக் கருத்தினை விதைக்கின்றனர். இது சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. இளைஞ்சர்கள் சிந்திப்பார்களா? முதலமைச்சர் பதவி என்பது அம்பாறைக்கு கொடுக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம், அங்கேயும் என்ன ஒற்றுமையாகவா இருக்கப் போகின்றனர்? அக்கரைப்பற்றுக்கு தர வேண்டும் என்றோ, அட்டாளைச்சேனைக்கு தர வேண்டும் என்றோ, நிந்தவூருக்கு தர வேண்டும் என்றோ, சாய்ந்தமருதுக்கு தர வேண்டும் என்றோ, கல்முனைக்கு தர வேண்டும் என்றோ அல்லது சம்மாந்துறை தர வேண்டும் என்றோ இதே பிரதேச வாதம் பேசி பிரிந்து கிடப்பார்கள் என்பதில் ஐயமில்லை. பழமை அரசியல்வாதிகள் நம் சமூகத்தின் சாபக்கேடுகள் இளைஞ்சகளே எப்போது விழித்தெழப் போகிறிர்கள் இந்த அவல நிலையிலிருந்து நம் சமுகத்தை மீட்டெடுக்க?

    ReplyDelete
  5. இவர்கள் பதவி,பணத்துக்காக அரசியலுக்கு வந்தவர்கள் இவர்களுக்கு பதவியும் பணமும் கொட்டாத வரை பிரச்சினைகள் தொடரும். இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வந்திருந்தால் இப்படி கீழ்த்தரமான சண்டைகள் பிரச்சினைகள் செய்ய மாட்டார்கள் 

    ReplyDelete
  6. இவர்கள் பதவி,பணத்துக்காக அரசியலுக்கு வந்தவர்கள் இவர்களுக்கு பதவியும் பணமும் கொட்டாத வரை பிரச்சினைகள் தொடரும். இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வந்திருந்தால் இப்படி கீழ்த்தரமான சண்டைகள் பிரச்சினைகள் செய்ய மாட்டார்கள் 

    ReplyDelete
  7. sakotharar jameel i niyamippathe sariyaana mudivu.. ampaarai mawattam muslim congress i oru pothum kaiwidaathu .. melum kalmunai makkalin aasayum athuwe.. inth idaththil panakkaara warkkam melongiyullathu ..

    ReplyDelete
  8. Who's this Jameel looks like Charlie Chaplin ha ha ha😀

    ReplyDelete
  9. We all need an alternative party to SLMC to represent Muslims, now the SLMC only representing the bankers of SLMC black money

    ReplyDelete
  10. i am not saying Jameel is good and Hafees is an only the robber in the SLMC. if we carry the burden then we know the pain of losses and the heal of success. If some one is asked for his / her right we should not say he is trying to divide the party on village or area basis, first we should think whether the SLMC decision was correct or not ? then we should shout. Muslims of Ampara voted 83,658 votes in PC elections, out of 132,917 don't the Muslims of Ampara have the right to ask for the lion share in the councils of SLMC ? is it democracy in SLMC, Ampara Muslims cannot be fooled any more to offer their votes to make National list MPs like Baseer Dawood, etc.

    ReplyDelete
  11. Mr. Sri Lankan,
    What you know about SLMC? In all your comments you were criticizing SLMC which visualized that you had some personal issues with. However, I want to ask you “do you think that people voted for getting the minister posts or change the government?” of course to change the government and that was the common target without any egotism and preconception, now you are talking about rights and posts. It is shameless, not only for you; for entire Muslim. Do you think about this? Now whereas everyone need now posting during this 100 days scheme? Please try to think out of box.

    ReplyDelete
  12. We know always there are some stooges to nod and support Hakeem whatever he does and they are waiting for the peaces of bones from his ministry

    ReplyDelete
  13. Jameeluku nalla ari y kodu y alla muslimkal pathavi very peddithu aliwathu achigam

    ReplyDelete

Powered by Blogger.