Header Ads



பின்னால் இருந்தது, மகிந்த ராஜபக்ச

நுகேகொடையில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக தெரிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தும் கூட்டத்தை ஏற்பாடு செய்யும் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்ற மக்கள் நிலைப்பாடு ஒன்றை கட்டியெழுப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்காசம சமாஜக் கட்சி ஆகிய கட்சிகளின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ ஆகிய முன்னாள் அமைச்சர்களும் மேல் மாகாண உறுப்பினர் உதய கம்மன்பிலவும் இணைந்து இந்த பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டாலும் பின்னால் இருந்து மகிந்த ராஜபக்சவை அனைத்து வேலைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பது குறித்து பேசிக்கொண்டு அந்த கட்சியை இரண்டாக உடைத்து எப்படியாவது அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக மகிந்த ராஜபக்ச தற்போது பல்வேறு தந்திரோபாயங்களில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னாள் ஜனாதிபதியின் தலைமையிலான இந்த கூட்டணியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி தலைவர்கள் அகதிகளின் சங்கம் என அழைப்பதாக தெரியவருகிறது.

அத்துடன் நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆட்களை கொண்டு வருவதற்காக மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி பதவிக்காலத்தில் திரட்டிய பெருந்தொகை பணத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மகிந்தவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தயார் செய்யப்பட்டிருந்த நிலையில், பயன்படுத்தப்படாமல் இருந்த பெருந்தொகை புகைப்படங்கள், வீ.சீடிகள் இந்த கூட்டத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மகிந்த ராஜபக்சவின் பொதுக் கூட்டங்களில் வாழ்க என்று கோஷமிடும் குழுவினரும் இந்த கூட்டத்தில் பங்குபெற செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்ட 80 வீதமானவர்கள் அதிகளவில் மது அருந்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.