Header Ads



வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் 'இனச்சுத்திகரிப்பு' என விக்னேஸ்வரன் தீர்மானம் நிறைவேற்றுவாரா..?

வடமாகாண முதலமைச்சருக்கு விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களிடமிருந்து ஓர் வேண்டுகோள் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இடித்துரைத்து சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெறுங்கையுடன் ஓரிரு தினங்களில் விரட்டப்பட்டமை ஓர் அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு என ஒப்புக்கொள்ள வேண்டுமென வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின்  முக்கியஸ்தர் எம்.எம்.அமீன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையில் இனப்படுகொலைப் பிரேரணையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள தமிழ்க் கூட்டமைப்பு அந்த மாகாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இனச் சுத்திகரிப்பு என்ற தீர்மானத்தை வடமாகாண சபையில் நிறைவேற்ற வேண்டுமென அமீன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் - முஸ்லிம் உறவை வலுவூட்டவும் தமிழர் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கும் இந்தத் தீர்மானம் பெரிதும் வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இனப்படுகொலைத் தீர்மானத்துக்கு வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியமையை அவர் நினைவு படுத்தியுள்ளார்.

சுமார் கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் துன்பப்படும் வட மாகாண முஸ்லிம்களுக்கு விடிவு கிடைக்க வடமாகாண சபை ஆக்கபூர்வமான செயற்பாடுளை நல்குவது காலத்தின் தேவையாகவுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளாகிய உண்மையை அறிதல், நீதி கிடைத்தல், நிவாரணம் கிடைத்தல் என்பவற்றை உறுதி செய்யும் வகையில் முன்னாள் நீதியரசரும் வடக்கின் முதல்வருமான சி.வி.விக்னேஸ்வரன் பணியாற்றுவார் என வடபுல முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்து நிற்பதாக அவர் தெரிவித்தார்.

8 comments:

  1. இலங்கையில் இனச்சுத்திகரிப்பு என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரமே இடம்பெற்றுள்ளது .அது தமிழ் பேரினவாதிகளால் செய்யப்பட்டுள்ளது .இதற்கான தீர்மானத்தை புலி சார்புடைய வட மாகான சபையில் எதிர்பார்க்க முடியாது . அதனை எமது கிழக்கு மாகாணத்திலேயே நிறைவேற்ற வேண்டும் .செய்வார்களா ?

    ReplyDelete
  2. அப்படியான ஒரு தீர்மானத்தை கிழக்கு மாகாண சபையில் மு.கா.வினரால் கொண்டு வர முடியமா?

    ReplyDelete
  3. Etikku pooti wendam.otrumaiyaha irundu kaariam saathikka muslims try pannuwom.

    ReplyDelete
  4. வணக்கம்
    உண்மையில் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது விடுதலைப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றுள் ஒன்று தான் என்பதை மறுப்பதற்கில்லை. அதேபோல் தான் பள்ளிவாசல் படுகொலையும். ஆனால் அதனை நீங்கள் வடமாகாணசபை கொண்டுவந்த தீர்மானத்துடன் ஒப்பிட்டு கேள்வி கேட்பது முரண்பாட்டுடனான கேள்விதான். வடமாகாணசபை எந்த அதிகாரமும் இல்லாது இருந்து கொண்டு பதவியெற்ற காலத்தில் ஒரு உருப்படியாக செய்திருக்கும் வேலை இனவழிப்பு பற்றிய தீர்மான நிறைவேற்றம். அதனை காத்திருந்து கவனித்து முஸ்லீம்கள் வெளியெற்றப்பட்டது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றச் சொல்லிக் கேட்பது...? ஆகவே! நண்பர்களே! தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் பலவீனமான காலத்தில் இப்படியான கேள்விகளைத் தவிருங்கள்.

    பழைய விசயங்களைக் கிண்டிக் கிளறி அதனை அடுத்த பரம்பரைக்கும் கடத்தும் வேலையை நாம் கைவிட வேண்டும். எனக்கு நிறைய முஸ்லீம் நண்பர்கள் இருக்கின்றனர். நாங்கள் வெ வ்வேறு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் அதனை எமக்கிடையில் வைத்துக் குழப்பிக் கொள்வது கிடையாது. அது உனது அரசியல் இது எனது அரசியல் - மொழியால் ஒன்று பட்டாலும் எமக்கிடையே பண்பாட்டு ரீதியான மத ரீதியான வேறுபாடு உள்ளதல்லவா அதேபோல் தான் அரசியல் வேறுபாடு இருக்கும் அதனை நாம் கலந்துரையாட வேண்டும். நான் உலகில் பல முஸ்லீம் நாடுகளிற்குச் சென்றுள்ளேன். அரபி மற்றும் ஆபிரிக்க முஸ்லீம்களுடனும் உரையாடியுள்ளேன். அவர்கள் மனிதர்கள் என்பதற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது தமது பண்பாட்டைவிட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அரசியல் ரீதியான உரையாடல் பல தடவை நல்ல கலந்துரையாடலாக இருந்துள்ளது. தமது தவறுகளை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அதேநேரம் நிறைய நியாயமான கேள்விகளையும் அவர்களிடத்தில் காணலாம்.

    இதனை ஏன் கூறுகின்றேன் என்றால்.... எனது சொந்த இடம் வவனியா குறிப்பிட்ட முஸ்லீம்கள் வடக்கில் இருந்து வெளியெறி வருகின்ற போது எங்களுடைய வீட்டையே அவர்களிற்கு கொடுத்துவிட்டு நாம் முற்றத்தில் படுத்துறங்கினோம். அப்பொழுது எங்களுடைய வீட்டிற்குள் இருந்து வந்த குரல் இனி எங்கட பகுதிக்குள் ஒரு தமிழனையும் விடக் கூடாது குத்தியே கொல்ல வேண்டும் என்றது அந்தக் குரல். நாங்கள் யாரும் கோவப்படவில்லை. அந்த நியாயமான கோவத்தை நாம் ஏற்றுக் கோண்டோம். வவுனியாவில் நாங்கள் நோன்புக் கஞ்சி குடிப்பதும் எங்கள் வீட்டுப் பலகாரங்களை அவர்கள் உண்பதும் என்ற பண்பாடு இருந்துகொண்டேதான் வருகின்றது. பைசர் - ராசிக் - சுகானி - காதர் .....இன்னும் பலர் நினைவிற்கு வருகின்றனர். இது வவுனியாவில் எந்தப் பிழைப்புவாத அரசியல் வாதிகளாலும் குழப்பிவிட முடியாததாக இருக்கின்றது.

    தயவு செய்து பழைய விடயங்களைப் பந்தி வைப்பதை கூடியவரை நாம் தவிர்க்க வேண்டும் உள்ளக கலந்துரையாடல் மூலம் ஆரோக்கியமான அரசியல் சிந்தனை விதைக்கப்பட வேண்டும். வவுனியாவில் மட்டுமல்ல கொழும்பு முஸ்லீம் லீக் மண்டபத்தில் இடம்பெற்ற அரசியல் கூட்டங்களிலும் கலந்துள்ளேன். இருதரப்பு தவறுகள் பற்றியும் ஆதாரத்துடன் பேசியிருக்கின்றேன். மனச்சாட்சிக்கு விரோதமாக என்னால் கூறப்பட்டவை ஏற்றுக் கொள்ளாமல் விடப்படவில்லை. எனவே நண்பர்களே! தவறுகளை பரப்பி எமது அடுத்த சந்ததியிடம் பிளவை ஏற்படுத்தாது வலுவான உறவைக் கட்டியெழுப்ப வழிகோலுவேம். முஸ்லீம்களை வடக்கில் இருந்து வெளியேற்றியதற்க காரணமான புலிகள் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியிரந்தனர். தண்ணிமுறிப்பு வயல்காணிகள் முஸ்லீம்களிற்குச் சொந்தமானவை தமிழருக்கு விற்கக் கூடாதென கூறி அதனை தடுத்திருந்தனர். அது மீண்டும் முஸ்லீம்களிடமே செல்ல வேண்டும் என்ற நோக்கம் தான். அத்துடன் நீராவிபிட்டி மற்றும் நாச்சிக்குடாவில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு தமிழர் புணர்வாழ்வு கழகம் நிவாரண உதவிகளை வழங்கியிருந்தது. அது தொடர்பான செய்திகளை நான் பதிவு செய்திருந்தேன் அந்தப் பகுதியில் மீளவும் குடியேறியோர் அதனை மறுக்க மாட்டார்கள். அவை போன்ற நல்லெண்ணத்தில் பார்க்க வடமாகாண சபை புதிதாக எதைத் தரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல விமர்சனங்களுக்கு முகம் கொடுத்தாலும் முஸ்லீம் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என நினைப்பது சமகாலத்தில் உள்ள உண்மை அல்லவா?

    இனியும் நிறைய எழுத வேண்டும் என தோன்றவில்லை... புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன். எனக்குத் தெரியும் முஸ்லீம்களில் ஏராளமான நல்லறிஞர்கள் உள்ளீர்கள்... நல்லதாக எதிர்காலம் அமைய உழைப்பீர்கள் என நம்புகின்றேன்.

    நட்புடன் - கனகரவி

    ReplyDelete
  5. Specially to the muslim members in north provincial council, please bring a proposal immediately like that.

    ReplyDelete
  6. உண்மையில் இந்த காலத்தைப்பொறுத்தவரையில் ஒற்றுமையொன்றே கைக்கொடுக்கும் so எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் நாம் எப்போது பிரிவோம் என்று மேற்கத்திய நாடுகள் பார்த்துக்கொண்டுள்ளனர் அவர்களின் ஆயுதங்களை பரிசோதனைக் கூடமாக பாவிக்கிரார்கள் இதுதான் உண்மை

    ReplyDelete
  7. இவர்கள் வடக்கில் இருந்து மட்டும் அல்ல கிழக்கில் இருந்தும் முஸ்லிம்களை அடியோடு துடைக்க இருந்ததற்க்கு மூதூர் விடயம் ஒரு தடயம் ஆஹ இவர்கள் ஒரு சிருபான்மையஹ இருந்துகொண்டு இன்னும் ஒரு சமூகத்தை அழிக்க நினைத்தவர்கள் அல்லாஹ் இவர்களைப் பார்த்துக் கொண்டான்

    ReplyDelete
  8. அப்படியானால் இஸ்லாமிய தேசத்தில் நடைபெரும் மரண ஓலங்கலுக்கு எந்த கடவுள் காரணம் ஏன் அதை அல்லாவால் நிறுத்தமுடியாதா

    ReplyDelete

Powered by Blogger.