February 09, 2015

முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள தீர்மானத்துக்கு, பௌத்த பீடங்கள் முழு ஆதரவு - ரவூப் ஹக்கீம்

கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள தீர்மானத்துக்கு மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளின் முழுமையான அசீர்வாதம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று (09) கண்டியில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்படும் தேசிய அரசாங்கத்தைப் போன்று மத்திய மாகாணத்திலும் இவ்வாறான நிலைமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகளையும் ஆலோ சனைகளையும் முன்வைக்க எமது ஸ்ரீல.மு.க. தீர்மானித்துள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

புதிய அரசாங்கத்தில் அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் றவூப் ஹக்கீம் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் கிழக்கு மாகா ணத்தில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கண்டியிலுள்ள சங்கைக்குரிய மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து அவர்களினது ஆசியும் மற்றும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் வகையில் நேற்று (09) கண்டிக்கு விஜயம் செய்தார்.

பின்னர் ஊடகவியலாளர். வினவிய கேள்விகளுக்கு பதிலளித்து கூறுகையி லேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆட்சி அதிகாரங்களை தக்கவைக்க முன்னைய அரசு உச்சக்கட்ட இனவாதத்தை பிரசாரம் செய்தது குறிப்பாக அரச ஊடகங்களின் மூலமாக கிராமப்புற சிங்கள வாழ் மக்களுக்கு முஸ்லிம் களைப் பற்றி மிக மோசமான காட்சியொன்றே காட்டப்பட்டும் சித்தரிக்கப்பட்டும் வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

இதை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. எனவே மக்கள் இந்நிலைமையை மாற்றி வேறொரு அரச தலைமையை தெரிவு செய்துள்ளனர். எனவே இந்த ஐக்கிய நாட்டுக்குள் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டியது காலத்தின் தேவை என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மகாநாயக தேரர்களிடம் தெரிவித்தார்.

5 கருத்துரைகள்:

இது ஒரு latest ஜில்மால் ஆ?

Rauf! Don't try to justify your personal decision, there are better choices with high caliber. What you did is you fed Hafez Nasir's power hungry. Whic is a personal deal between you and Hafez Nazeer.

Can Hafez Nasir explain to Muslim community on which basis he is claiming the ownership of Darussalam,Head office of SLMC? How comes he run his business firms at Darussalam?

Rauf Can you justify Hafez Nazeer intergrity to hold chief Ministor post?

அமைச்சர் ஹகீம் அவர்களே
உங்களது கட்சியின் யாப்பாக அல்குரான் .அல்ஹதீஸ் உள்ளது .எனவே இப்படியான ஒரு பொறுப்புமிக்க கட்சியின் தலைமை பொறுப்பில் தாங்கள் நீண்ட காலமாக இருந்து வருகின்றீர்கள் .இந்த பொறுப்பு பற்றி மறுமையில் அல்லாஹ் உங்களிடம் வினவும் போது அதாவது அல்குரான் ,அல்ஹதீஸ் அடிப்பையில் 'உமது கட்சியின் மூலம் நீர் என்னசெதாய் ?'என்று நிச்சயம் கேட்பான் .எனவே இனிவரும் காலங்களிலாவது தங்களது வேலைத்திட்டங்களை இதனடிப்படையில் அமைத்துங்கள் .உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் ஒரு வட்டியற்ற பொருளாதார திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள்.அதனை வெற்றிகரமாக இந்த நாட்டுக்கு செய்து காட்டுங்கள் .இதற்கு இந்த அஸ்கிரிய பீடம் மட்டுமல்ல முழு தேசமும் உங்களை பாராட்டுவார்கள் .அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும் .

Do not say this ugly SLMC is guided by the Holy Quran and Hadees, (Asthahfirullahil-aleem) this is why other communities hate Islam and its principles. They think that Quranic principles are the SLMC principles, so other communities do not know how to differentiate Quranic principles and SLMC activities activities. Please declare that SLMC or its constitution has nothing to do with Quran and Hadees please .......

சிச்சீ நீங்களா இப்படிக் கூறுகிறீர்கள்????????

Post a Comment