Header Ads



ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய 1600 ஆவணங்கள் மீட்பு

ஊழல், மோசடிகளுடன்  தொடர்புடைய முறைப்பாடுகள் அடங்கிய 1600 ஆவணங்கள் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ அறையில் அலுமாரியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த ஆணைக்குழுவின்   புதிய பணிப்பாளரான தில்ருக்ஷி டயஸ் விக்கிரசிங்கவினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆணையாளர்களின் உத்தரவின் பேரில் விசாரணைக்கென பணிப்பாளர் நாயகங்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்த ஆவணங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஆணைக் குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாக 1600 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அந்த ஆவணங்களிடையே பிரபல அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் அடங்கிய ஆவணங்களும் காணப்பட்டுள்ளதாகவும் அதில் வருடக் கணக்காக மறைத்து வைத்திருந்த ஆவணங்கள் இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை  கடந்த காலங்களில் உயர் மட்ட உத்தரவுகளின் பிரகாரம் இந்த ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும்  அந்த தகவல்கள் தெரிவிப்பதுடன் இந்த ஆவணங்களில் காணப்படும் குற்றச்சாட்டுகள்  தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

2 comments:

  1. இதைத்தான் முன்னாள் பெரியவர், 'ஃபைல்கள்.. பைல்கள்' என்று சொல்லிக்கொண்டிருந்தாரா?

    ReplyDelete
  2. மறைந்த முன்னாள் ஜனாதிபதி கையொப்பம் பெற்ற வெற்றுக் கடதாசிகளை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டினார்.

    பதவியிழந்த இந்நாள் ஜனாதிபதி ஒளித்து வைக்கப்பட்ட ஊழல் பேர்வழிகளின் கோப்புக்களை வைத்துக் கொண்டு பொம்மைகளாக்கியுள்ளார் மக்கள் பிரதிநிகளை!

    மொத்தத்தில், தேசத்துரோகங்களே தேசபிதாக்களால் முன்னெடுக்கபட்டுள்ளன!

    ReplyDelete

Powered by Blogger.