Header Ads



Facebook இல் Account வைத்திருக்கும் அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதரர்களுக்கும்...!

.Ash Sheikh M Z M Shafeek.

(கட்டுரை சற்று நீளமானது என்பதற்காக முழுமையாக வாசிக்காமல் இருந்து விடாதீர்கள்)

புத்த, இந்து , கிறிஸ்தவ  மத விவகாரங்களுக்கான அமைச்சுக்களுக்கு தனித் தனியாக நேற்று  (12/01/2015)  மூன்று அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதே வேலை முஸ்லிம் விவகார அமைச்சராக நேற்று  யாரும் நியமிக்கப் படவில்லை. எனினும் எ ஐக்கிய தேசிய கற்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் அவர்களை முஸ்லிம் விவகார அமைச்சராக நியமிக்க இருந்ததாகவும் அவர் அங்கு சமூகமளித்திருக்காத காரணத்தினால்  இன்று (13/01/2015) அல்லது வரக்கூடிய வெள்ளிக்கிழமை  ஹலீம் MP இற்கே அவ் அமைச்சுப் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் நம்பகமான சில ஊடகங்கள் மூலமாக பின்பு  அறிந்து கொண்டேன். நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

ஹலீம் MP யுடன் எனக்கோ அக்குரணை மற்றும் அதனைச் சூழவுள்ள கல்ஹின்னை, கட்டுகஸ்தோட்ட, மடவள, உடத்தலவின்ன போன்ற ஊர்களில் வசிக்கும் ஹலீமை தாறுமாறாக விமர்சித்து வரும்  பெரும்பாலான முஸ்லிம்களுக்கோ தனிப்பட்ட விதத்தில் எவ்வித கோபதாபமோ முரண்பாடோ கிடையாது என்பது உண்மை. எனினும் மறைந்த அக்குரனையை சேர்ந்த (ஹரிஸ்பத்துவ தொகுதி) முன்னாள்  அமைச்சர் A C S ஹமீத் அவர்களின் பணி, பேச்சாற்றல், துடிப்பு , சேவை போன்றவற்றோடு ஒப்பிடும் போது  ஹமீதின்  பின்பு அவரது குடும்ப பின்னணியில் பாராளுமன்றம் சென்றுள்ள ஹலீம் விடையத்தில் பூச்சியம் என்பதைத் தவிர  பீத்திக் கொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பாராளுமன்றத்தில் கொட்டாவி விடுவதற்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே வாயைத் திறப்பவர் என்று ஹலீம்  பலராலும் விமர்சிக்கப் பட்டு வருவது பலரும் அறிந்ததே. 

 அக்குரணை, கண்டி மற்றும் அவற்றை சூழ உள்ள பகுதிகளில் தவிர நாட்டின் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு ஹலீம் என்ற பெயரில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருப்பது கூட தெரியாமல் இருக்கக் கூடும். (ஏனெனில்  ஐக்கிய தேசிய கட்சி  எதிர் கட்சியாக இருந்த பொழுதும் அது ஆழும் கட்சியாக இருந்த பொழுதும் அவர்  நீண்ட காலமாக  அக் கட்சியில் இருந்து வருகின்ற பொழுதும் அவர் பாராளுமன்றத்துக்கு உள்ளேயோ வெளியிலோ  ............... ஒன்றுமே இல்லை என்ற நிலையில் எப்படி மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்க முடியும் ??? )

 அடுத்த தேர்தலில் கண்டிப்பாக இவர் வீட்டுக்கு அனுப்பப் பட வேண்டியவர். அக்குரணை  மக்கள் இவருக்குப் பதிலாக  கண்டிப்பாக துடிப்பான சமூக அக்கறை கொண்ட ஒருவரை அடுத்த தேர்தலில்  பாராளுமன்றம் அனுப்ப  வேண்டும். தனிப்பட்ட ஒருவரை தரக் குறைவாக விமர்சிக்கக் கூடாது எனினும் எந்த மார்க்க ஈடுபாடும் இல்லாத, முஸ்லிம்களை விட்டும்  மிகவும் தூரமாகி குருகொட, அலவத்துகொட சிங்களவர்களோடு அன்னியோன்னியமாகி வசித்து வந்த அவர் தற்பொழுது மாவில்மட பகுதியில் போய் அதே Style இல் வசித்து வரும் இவ்வேளையில்  இவர் கையில் முஸ்லிம் விவகார அமைச்சைக் கொடுத்தால் என்னவாகும் என்பதை விளங்கிக் கொள்ளும்  நீங்கள் யாராவது சம்பந்தப் பட்ட ஆளும் அரசின் உயர் மட்டங்களின் கவனத்துக்கு இதனை கொண்டு செல்லும் பட்சத்தில் ஓரளவேனும்  பொருத்தமான ஒருவர்  முஸ்லிம் விவகார அமைச்சராக நியமிக்கப் பட   வாய்ப்பிருக்கிறது என்ற ஒரே நோக்கத்துக்காகவே நான் இக்கட்டுரையை எழுதினேன் என்பதையும் ஹலீம் MP பற்றி  தோலுரித்துக் காட்டி எதையாவது சாதித்துக் கொள்ள வேண்டும், கோபம் தீர்த்துக் கொள்ள வேண்டும்  என்ற எண்ணம் கடுகளவேனும் இதில்   இல்லை என்பதையும் ரப்பு அல்லாஹ் நன்கரிந்தவனாவான். வேண்டுமெனில் அவருக்கு பொருத்தமான  வேறு ஏதேனும் அமைச்சுப் பதவி வழங்கப் படலாம். எனினும் முஸ்லிம் விககாரம் ஆகவே ஆகாது.  

நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடப்பட்ட இனத் துவேச செயற்பாடுகள் அரசு மாறிய கையோடு அடங்கி போய்  விட்டது என்று நினைப்பது முட்டாள் தனமானது.  ஏனெனில் இனத் துவேசம்  முற்றாக அடங்குவதற்கு BBS, ராவண பலய போன்ற அமைப்புக்கள்  தடை செய்யப் படுவது மாத்திரம் போதுமாகாது. கடந்த சிலகாலமாக  சும்மா இருந்த பௌதர்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக உசுப்பிவிடப்பட்டுள்ள நிலையில் நிலைமை கைகூடி வர  சில வருடங்கள் கூட நாம் பொறுமை காக்க வேண்டி வரக் கூடும். ஆக இவ்வாறானதொரு நிலையில் தானும் தன்பாடாகவும், முஸ்லிம்களை விட்டும் மார்க்க விவகாரங்களை விட்டும் ஒதுங்கி மௌன விரதம் காத்து வாழும் இவரிடம்  முஸ்லிம் விவகார அமைச்சைக் கொடுத்தால் ???  எனக்கு ஓரளவு அறிமுகமுள்ள  சில முஸ்லிம்  அரசியல் உயர் மட்டங்களிடம் இவ் விடையம் பற்றி இன்று சற்று தெளிவு படுத்தினேன். உங்களில் சக்தியுள்ளவர் இதனைச் செய்வது மிகப் பெரும் ஒரு சமூகக் கடமை என்பதை மறந்து விடாதீர்கள். 

16 comments:

  1. May Allah Bless you for enlightening this issue. I hope this matter should be taken to proper authority in decent manner and but not left to public.

    The matter can taken to current government (President, Prime minister) via a /group of religious Muslim/s who are close to above officials.

    Hope Allah will help us in finding a religious minister, who is in touch with Islamic knowledge and Muslim umma.

    May Allah Guide all of in the path of who succeeded this world ( Sahaaba, Tabieen and Atbaut Tabieen) .

    ReplyDelete
  2. உங்கள் கருத்து உண்மையாக இருந்தால்இ இது விடயமாக பல முக்கிய முஸ்லிம் தலைவர்கள் ஒன்று கூடி ஓர் மகஜரை எழுதி ரவுப் ஹகீம்இ ரிஷhத் பதியுதீன் போன்றவர்கள் மூலம் ஜனாதிபதியிடம் கையளித்தால் அதன் மூலம் தடுத்து நிறுத்தலாம். இல்லா விட்டால் குரங்கின் கையில் பூமாலை கொடுத்த கதை தான்.

    ReplyDelete
  3. கடந்த காலங்களில் மஹிந்த அரசில்முஸ்லிம்களுக்கு என்று ஒரு அமைச்சர் இல்லாமல் இருந்ததை புதிய ஜனாதிபதியவர்கள் அதர்க்குரிய கதவை திறந்துள்ளார்கள் அப்படியானஒரு நிலையில்நமக்குள் யார் செரியில்லை யார் செரி என்ற சண்டை வேண்டாம் முதலில் நமக்கு கிடைக்க வேண்டிய வழிகளை துறந்து எடுத்துவிட்டு உங்கள் சண்டையை ஆரமபியுங்கள் கடசியில் ஹஜ்கோட்டா சண்டைபோல் முற்றி ஏதோ ஒரு சிங்ஹல அமைச்சருடன் இதை இணைத்து கொடுக்க வந்தாலும் ஆச்சரயப்படுவதற்கல்லை அதேவேளை இது ஒரு இடைக்கால அமைச்சரவையே மூன்று மாதம் பொறுத்திருந்தால் பார்க்க முடியும் அதேவேளை இவருக்கு இந்த அமைச்சு செரிவராது என்பது உண்மை

    ReplyDelete
  4. i live in kurugoda akurana. mr.haleem lives in neighbourhood.i just knew he s member of parliment after going through this artcle

    ReplyDelete
  5. Why Jaffna muslim publishing this kind of stories? Mr sheikh you guys only muslims.We are (akurana people) not muslims right? why you guys doing this kind of dirty job?

    ReplyDelete
  6. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
    முஸ்லிம் சமயம் மற்றும் கலாச்சாரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் எதிரொலியாகத்தான் தற்போதைய அரச மாற்றம் ஏற்பட்டுள்ளது .இவ்வாறு புதிய அரசாங்கத்தில் முஸ்லிம் கலாசார அமைச்சு கிடைத்துள்ளது .இவ்வாறான சந்தர்ப்பத்தில் சகோதரர் ஹகீம் ,ரிசாட் போன்ற அமைச்சர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு சேவை செய்யக்கூடிய இந்த முஸ்லிம் சமய கலாசார அமைச்சை தான் முதலில் போட்டி போட்டு எடுத்திருக்க வேண்டும் . அதை விடுத்து தங்களுக்கு இலாபம் தரக்கூடிய அமைச்சுக்களை இவ்விருவரும் பொறுப்பெடுத்து உள்ளார்கள் .இச்செயற்பாடானது இன்னமும் இவர்களில் மாற்றம் வரவில்லை என்பதை காட்டுகின்றது .

    ReplyDelete
  7. Mr.Shafeek, முதலில் உங்களது பெயரில் உள்ள Ash (சாம்பல்) என்பது சரிதானா என்பதை ( I'm not sure) சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

    இந்த அமைச்சரவை மிக நீண்ட காலம் பயணிக்க போவது இல்லை, எனவே தற்போதுள்ள நிலைமையில் சர்ச்சைக்குரிய, நமக்குள்ள குத்து வெட்டுக்களை தற்போதைக்கு ஒரு பக்கம் வைத்துக் கொண்டு ( இது சரியான நேரம் இல்லை ) இந்த அமைச்சுக்கு ஒரு நல்ல செயலாளரை பதவியில் அமர்த்துவதற்கு முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  8. I don't know personally Kabeer Hasim. Yes bro, u may correct.But by appointing him as the minister of muslim affairs, Allah may grant more thaqua & Ieeman in his heart OR By himself he may try to increse those.Everything is upon Alla's wish.So it's much beter to make dua by thinking positively....

    ReplyDelete
  9. Jazakallah. Good article. Yes you are 100% correct. Yes must be appoint a MP who knows Islam and practice Islam.

    ReplyDelete
  10. இது, இலங்கை முஸ்லிம்கள் கவனம் வேண்டியதொரு முக்கிய விடயம்.

    ReplyDelete
  11. இவ்விடயம் மிகவும் முக்கியமானது. இக்கட் டுரையாலரின் கரிசனை மிகவும் நியாயமானதே. ஹலீம் முஸ்லிம் கலாசார அமைச்சுப் பொறுப்பிற்கு எவ்விதத்திலும் தகுதியற்றவர். முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகத் தலைமைகள் இதில் விரைவில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

    ReplyDelete
  12. குடும்ப ஆட்சி குடும்ப ஆட்சி என்று வாய் கிழிய கத்தி விட்டு ACS ஹமீதின் சகோதரி மகன் என்ற ஒரே காரணத்துக்காக பாடசாலையின் உள்சுவர்களின் கலர் என்ன என்று தெரியாத; குடும்ப மேலாதிக்கம் தொடர்வேதுக்கு என்ற ஒரே காரணுத்துக்காக; ஒருவரிடம் முஸ்லிம் அமைச்சை கை அழிப்பது சரியாக குரங்கின் கை பூமாலை என்ற பழ மொழிக்கு ஒப்பானது.

    ReplyDelete
  13. முஸ்லிம் விவகார அமைச்சு ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு இன்றுவரை பணியாற்றியவரகள் என்ன கிழித்துவிட்டார்கள என்பதையும் சிறிது குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன செய்வது? என்ன எழுதினாலும் என்ன பேசினாலும் இவரகளைப் போன்றவர்களை நியமித்தால்தானே அவர்களுக்கு நிம்மதியாக இருக்க முடியும். நீங்கள் எழுதி பதிவிட்டு முடிய நியமனமும் வழங்கியாகிவிட்டது. இனியென்ன? கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்! முஸ்லிம்களை அந்த வல்ல நாயன்தான் காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete
  14. நல்ல ஒரு காத்திரமான கடிதம்.எமது முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு , சமூகத்துகாக, சமுதாய எதிர்கால நலன்களுக்காக தூர நோக்கோடு சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருந்து கொண்டிருக்கிரோம்.பெயர் பரிந்துரைக்கப்பட்ட MP கட்டுரையாளர் குறிப்பிட்டது போல் இலங்கை முஸ்லிம் சமூகத்தால் அறியப்பட்டவரல்ல.
    இந்த பொருப்பு ஒரு அமானிதம்.ஹுனைஸ் பாருக் இதற்கு தகுதியானவர் என்று நினைக்கிரேன்.அவர் இதே அமைச்சில் ஏற்கனவே பல வருடங்கள் பணி புரிந்தவர்.

    ReplyDelete
  15. இங்கு பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக ஹலீம் தகுதியற்றவர் என்கிற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அது மிகவும் தவறானதே. நாம் கண்டி மாவட்டத்தை சேர்ந்தாலும் எமது தொகுதியிலிருந்து பா. உ. ஒருவரை பெற்றுக்கொள்ள முடியாமல் பல நிருவாக வேலைத்திட்டங்களை இழந்திருக்கிறோம். எமது ஹேவாஹெட்டை தொகுதியிலிருந்து அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்பவர் கெஹலிய அடுத்தபடியாக எஸ்.பி., காதர், ஹக்கீமுக்கும் கணிசமான அளவு வாக்குகள் கிடைக்கும் ஆனால் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் சொல்லக்கூடியளவில் எதுவும் கிடையாது. ஹக்கீம் கடந்த மஹிந்த அரசாங்கத்திலும் அமைச்சராகவிருந்தார்.
    ஆனால் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய மாகாண சுகாதார அமைச்சராக இருந்த ஹலீம் எமது பிரதேசத்தில் குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் 4 வைத்தியசாலைகள் அமைப்பதற்கான பறிந்துறைகளை வழங்கி வைத்தியசாலை நிருமானத்திற்கான அங்கீகாரத்தை வழங்கினார். அவருக்கு 2000 க்கும் குறைவான் வாக்குகள் கிடைக்கும் எமது தெகுதிக்கு அவர் பதவியில் இருந்தபோது இவ்வளவ சேவை செய்திருப்பின் ஏனைய பிரதேசத்தை பற்றி நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
    அத்துடன் மத்திய மாகாணத்தில் பல பிரதேங்களிலும் இவரின் பெயரை குறிப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு வைத்தியசாலைகளும் கிளிணிக் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தொடர்ந்து எதிர்க்கட்சியிலேயே இருந்தாலும் ஹரிஸ்பதுவ தெகுதியில் இருக்கும் நிருவாக ரீதியிலான பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்பி தீர்வையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.
    முக்கியமாக சுட்டிக்காட்டவேண்டிய விடயமொன்று உள்ளது. அளுத்கம பிரச்சினை ஏற்பட்ட பின்னர் பாராளுமன்ற சட்டம் ஒழுங்கு தொடர்பான அநுரகுமார திஸா பரிந்துறையில் இடம்பெற்ற முழுநாள் விவாதத்தின்போது ஹக்கீம் ரிஷாட் என ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் தலைமறைவாகியிருந்தநிலையில் பாராளுமன்றில் உரையாற்றிய முஸ்லிம் எம்.பி. ஹலீம் மாத்திரமே என்பதையும் நிணைவில்கொள்ளவேண்டியுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.