Header Ads



பூமியை கடக்கும் ராட்சத விண்கல்

விண்வெளியில் எரிகற்கள் என அழைக்கப்படும் விண்கற்கள் சுற்றி திரிகின்றன. சில நேரங்களில் அவை பூமியை தாக்கும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் விண்கற்கள் பூமியை தாக்காமல் கடந்து சென்று விடுகின்றன.

அது போன்ற ஒரு விண்கல் பூமியை கடக்க நெருங்கி வருகிறது. அதன் பெயர் 2004 பி.எல்.86. இது மலை போன்று மிகப் பெரிய ராட்சத விண்கல்.

இது சந்திரனை விட 3 மடங்கு பெரியது. தற்போது இது பூமியில் இருந்து 7 லட்சத்து 45 ஆயிரம் மைல் (12 லட்சம் கிலோ மீட்டர்) தூரத்தில் உள்ளது.

இந்த தகவலை ‘நாசா’ மையத்தின் ஜெட் புரோ புல்சன் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இது போன்ற விண்கல் பூமியை 200 ஆண்டுக்கு ஒருமுறை கடக்கும். அதே நேரத்தில் பூமியில் மோதாமல் கடந்து செல்லும். அது போன்று இந்த எரிகல்லும் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.