Header Ads



கொழும்பில் ரணில் பாதுகாப்பில் கோட்டா...?

-நஜீப் பின் கபூர்-

இலங்கை அரசியலில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது. காட்டுத் தீ போல் சுதந்திரக் கட்சி ஆதிக்கம் சந்திரிக்காவினதும் மைத்திரியினதும் கட்டுப்பாட்டில் வந்த கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தற்போது இலங்கை அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு விவகாரம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபே ராஜபக்ஷ பற்றியது.  

அவர் எங்கிருக்கின்றார் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டாரா? சிங்கப்பூர் போய்விட்டார். மாலைதீவு போய்விட்டார் என்று ஒன்றுக் கொன்று முறனான செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் எமக்கு கிடைக்கின்ற நம்பகத்தனமான தகவல்களின் படி அவர் கொழும்பை விட்டு எங்கும் செல்லவில்லை. அவரை அப்படி சுலபமாக அனுப்பிவைக்கவும் தற்போதய ஆளும் தரப்பு  கடும் போக்காளர்கள் விரும்பவில்லை என்று தெரிகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும்  ரணில் விக்கிரமசிங்ஹவுக்குமிடையில் நடந்து இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவர் தற்போது ரணில் விக்கிரசிங்ஹாவின் பாதுகாப்பில்  மறைவான இடமொன்றில் கொழும்பில் அல்லது புற நகரில் வைக்கப்பட்டிக்கின்றார் என்று தெரிகின்றது.

ரணில் விக்கிரமசிங்ஹாவின் இந்த நடவடிக்கை ஆளும் தராப்பு கடும் போக்காளர்களுக்கு தெரியவந்து சம்பவம் உறுதிப்படுத்தப்படுமானால்  ரணிலுக்கு இது விடயத்தில் நெருக்கடி நிலை தோன்ற இடமிருக்கின்றது.

எனவே ஏறக்குறைய ரணில் விக்கரமசிங்கஹாவின் வீட்டுக்காவலில் முன்னாள் பாதுகாப்பச் செயலாளர்  பாதுகாக்கப்படுகின்றார் என்று நாம் இதனை எடுத்துக் கொள்ள முடியும்.

கோட்டாவை ரணில் பாதுகாக்கின்றார் என்ற விடயம் கண்டுபிடிக்கப்படும்போது  ரணிலுக்கு ஆளும் தரப்பினர் மத்தியில் பலத்த நெருக்கடிகள் தோன்றும்.

கோட்டாபே அமெரிக்க குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் அவருக்கு அங்கு செல்வது ஆபத்தான காரியமாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. சட்டம் அதன் கடமையை செய்யவேண்டும். ராஜபக்ச அன் கோ களின் அதிகார துஸ்பிரயோகம், ஊழல், சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம், குடும்ப ஆட்சி போன்றவற்றை கூறியெ my3 கூட்டமைப்பு வெற்றியீட்டியது. எனவே இவை அனைத்தும் உண்மை என நிருபிப்பது ரணில் my3 கூட்டமைப்புக்கு தார்மீக பொறுப்பாகும்.

    ReplyDelete
  2. சட்டம் அதன் கடமையை செய்யவேண்டும். ராஜபக்ச அன் கோ களின் அதிகார துஸ்பிரயோகம், ஊழல், சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம், குடும்ப ஆட்சி போன்றவற்றை கூறியெ my3 கூட்டமைப்பு வெற்றியீட்டியது. எனவே இவை அனைத்தும் உண்மை என நிருபிப்பது ரணில் my3 கூட்டமைப்புக்கு தார்மீக பொறுப்பாகும்.

    ReplyDelete
  3. நேரம் வரும் பொது எல்லாம் சரிவரும் உலகத்தில் எங்கும் போய் ஒழிய முடியாது இந்த நாட்டையே பாலாக்கியவனை எங்கும் தப்பி ஓட விடக்கூடாது கடந்த அரசாங்கத்தின் அனைத்து ஊழல்களும் இவனால் ஏற்ப்பட்டது

    ReplyDelete
  4. நேர்மையற்ற, மனிதாபிமானமற்ற முறையில் அரசாங்கத்தை தன் பிடிக்குள்ளேயே வைத்திருக்க தன்னால் முடிந்த அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி சதி வலைகளை வீசிய ஒருவனை ரனில் விக்கிரமசிங்க பாதுகாப்பு வழங்கி வைப்பதென்பது தம் கட்சிக்குத் செய்யும் துரோகமாகும்.

    ReplyDelete
  5. இவரை கைது செய்து கூண்டில் அடைக்க வேண்டியது தானே. இந்த நாட்டை நாசமாக்கியவனுக்கு பாதுகாப்பு எதற்கு? செத்துத் தொலை என்று விட்டு விட வேண்டியது தானே.

    ReplyDelete
  6. fir ownukkum allah kaalam kodutthuthan alitthan.awan rahman allawa.wait & see

    ReplyDelete
  7. FIR OWNUKKUM ALLAH AATCHIYEI KODUTTHU PIN ALITTHAN. WAIT & SEE

    ReplyDelete
  8. The seeds of wrong doing can be sown in secret but the harvest can not be concealed.

    ReplyDelete

Powered by Blogger.