Header Ads



அல்லாஹ்வின் மீது பகிரங்க சத்தியம் செய்ய வருமாறு, ஹுனைஸ் பாறூக் அழைப்பு

சிலாவத்துறை ஜும்ஆ பள்ளிவாசலிற்கு அல்லாஹ்வின் மீது பகிரங்க சத்தியம் செய்வதற்கு வருமாறு மௌலவி லாபிர் அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க வின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஹுனைஸ் பாறூக் அழைப்பு விடுத்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது,

கடந்த 2015.01.26ம் திகதி திங்கட்கிழமை மாலை சிலாவத்துறையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய மௌலவி லாபிர் அவர்கள் எனக்கு எதிராக பொய்க்குற்றச் சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது மாத்திரமன்றி பொய்ச் சத்தியமும் செய்துள்ளார்.

மௌலவி லாபிர் அவர்களின் இச் செயற்பாடு அவர் அல்குர்ஆன், நபிவழியைப் பின்பற்றுகின்ற ஒரு உலமா என்பதில் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொய்ச் சத்தியம் தொடர்பில் இஸ்லாம் எமக்கு கற்றுத்தருகின்ற பாடம் “முனாபிக் ஒருவனின் அடையாளத்தில் ஒன்று பொய்ச் சத்தியம் பண்ணுவதாகும்”.

இந்த வேளை மௌலவி லாபிர் அவர்களுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றேன். எாிபொருள் நிரப்பு நிலையம் விற்பனை தொடர்பில் பணப் பரிமாற்றம் அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற அவரது கூற்றை பகிரங்கமாக சிலாவத்துறை ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதற்கு அவரை பகிரங்க சத்தியத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பதுடன் அவரது பொய்க் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதுடன் இதற்குப் பிறகு இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாமென கூறிக் கொள்வதோடு, மறுமை நாளைப் பயந்து கொள்ளுமாறு அவருக்கு நான் ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் உபதேசம் செய்ய விரும்புகின்றேன்.
.
(பாராளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு)

2 comments:

  1. இப்படி ஒருவர் குற்றம் சாட்டுவதும் மற்றவர் மறுப்பதும் சத்தியம் செய்ய சொல்வதும் புளிச்சு போன விடயம்...! பொய் குற்றச் சாட்டு கூரியதாக கூரப்படும் மெளலவியவர்கள் அப்படி செய்தாரானால் (உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ ) நீங்கள் என்ன செய்வீர்கள்?????

    உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்காகவாவது நீங்கள் சட்ட நடவடிக்கை எடுத்து உங்களது மறுப்பை நிரூபிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Hunaiz, still you are too young to this Muslim politics, you need to learn a lot in politics, we have number of Ulamas, who give political pathwas, political speeches, etc. you need to offer them some kind of earning opportunities, jobs or posts like coordinators, etc. then they would come and make your platform colorful. you don't need make counter attacks on these kind of Ulamas, they would do in an effective ways. what a shameful Ulamas we have, don't you know?, remember still we have very respectful Ulamas, who fear only Allah

    ReplyDelete

Powered by Blogger.