Header Ads



ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த விசேட பிரிவு

ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த விசேட பிரிவு அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு விசேட விசாரணைப் பிரிவு ஒன்றை அமைக்க தேசிய நிறைவேற்றுப் பேரவை அனுமதியளித்துள்ளதாக, பேரவையின் உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, தர்மரட்னம் சிவராம் உள்ளிட்டவர்களின் கொலைகள், பிரகீத் எக்னெலிகொட போன்றவர்களின் காணாமல் போதல்கள் போன்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் கொலைகள், கடத்தல்கள் தொடர்பில் எவரும் குற்றவாளிகளாக தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க நிறைவேற்றுப் பேரவை தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.