Header Ads



இன்று நள்ளிரவு முதல், விலை குறைக்கப்படும் பொருட்கள் (விபரம் இணைப்பு)

அத்தியாவசிய பொருட்கள் 13 இன் விலை இன்று 30-01-2015 நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்தார். 

அதன் விபரம் வருமாறு 

இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் ஒரு பார்வை.

அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபா வரையில் அதிகரிக்கப்படுகின்றது.

"தனியார் துறைசம்பளத்தை 2500 ரூபாவால் உயர்த்துவதற்கு பரிசீலிக்கும்படி நிறுவனங்களிடம் கோரிக்கை

வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள சிரேஷ்ட பிரஜைகளின் பணத்திற்கு 15% வட்டி.

ஏப்ரல் மாதம் முதல் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிப்பு/ சமுர்திக் கொடுப்பனவு ஏப்ரல் முதல் அதிகரிப்பு.

கர்ப்பிணிப் பெண்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு.

பசும் பால் லீற்றர் ஒன்றுக்கானவிலை 10 ரூபாவால் அதிகரிப்பு/ உரமானியம் தொடர்ந்தும் வழங்கப்படும்.

எம்.பிகளுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி 5 மில்லியனுலிருந்து 10 மில்லியனாக உயர்வு

கல்வி துறைக்கான நிதி ஒதுக்கீடு மொத்தத் தேசிய உற்பத்தியின் 6 % உயர்வு

சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடு மொத்தத் தேசிய உற்பத்தியின் 3 % உயர்வு.

மண்ணெய் விலை மேலும் 6 ரூபாவால் குறைப்பு
சீனி- கிலோ 10 ரூபா குறைப்பு
பால் மா - குறைப்பு 61 ரூபா (400கிராம் பக்கெற் புதிய விலை - 325 ரூபா)
கோதுமை மா - கிலோ 12.50 ரூபா குறைப்பு
பாண் - 6 ரூபா குறைப்பு
பாசிப்பயறு - கிலோ 40 ரூபா குறைப்பு
நெத்தலி - கிலோ 15 ரூபா குறைப்பு
டின் மீன் - 60 ரூபா குறைப்பு
கொத்தமல்லி - கிலோ 60 ரூபாவால் குறைப்பு
மாசிக் கருவாடு - கிலோ 10 ரூபாவால் குறைப்பு
மிளகாய்த் தூள் - கிலோ 25 ரூபாவால் குறைப்பு
சீமெந்து விலை 90 (50 Kg) ரூபாவால் குறைப்பு.

1000 CC குறைவான வாகனங்கள் மீதான வரி 15 % குறைப்பு

கசினோ உரிமையாளர்கள் 1000 மில்லியன் ரூபாவை கட்டணமாக செலுத்தவேண்டும்.

திருமணப் பதிவு மீதான வரி 4000 ரூபாவால் குறைப்பு. புதிய கட்டணம் 1000 ரூபா.

ஐந்துக்கு அதிகமான ஒளிபரப்பு நிலையங்களைக் கொண்ட விளையாட்டு அலைவரிசைகள் அரசுக்கு 1000 மில்லியன் ரூபாவை ஒரு தடவை வரியாக செலுத்தவேண்டும்.

அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களுக்கு விசேட கடன் திட்டம்.

உபயோகப்படுத்தப்படாத அரச வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை

மஹா பொல புலமைப் பரிசில் 5000 ரூபா வரை அதிகரிப்பு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாதாந்தம் 250 ரூபா கொடுப்பனவு

ஸ்ரீ லங்கன், மிஹின் கடந்த 5 ஆண்டுகளில் 100 பில்லியன் ரூபாக்கு அதிகம் நட்டம்.ஸ்ரீ லங்கன், மிஹின் நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படவுள்ளன

நாடுபூராகவும் வங்கிச் சேவை மேம்படுத்தப்படும். பின் தங்கிய பிரதேசங்களில் வங்கிகளை அமைக்க நடவடிக்கை.

வெளிநாட்டு வேலைவாய்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் குறைப்பு

சிரேஷ்ட பிரஜைகளுக்கான பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 50 % குறைப்பு.

கடனட்டைகளுக்கான வட்டி வீதம் 8 % ஆல் குறைப்பு

அமைச்சுகள் , அரச நிறுவனங்கள் பத்திரிகைகளில் விளம்பரங்களை பிரசுரிக்கத் தடை.

நிதி நிறுவன ங்களின் மோசடி தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்.

அனைத்து பிரஜைகளுக்கும் வங்கிக் கணக்கு, வணிக வங்கிகளில் 250 ரூபாவை ஆகக் குறைந்த தொகையாக வைப்பிலிட்டு கணக்கை ஆரம்பிக்கலாம்.

ஒரு தடவை வரி 250 மில்லியன் ரூபா - தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கானது.

நபரொருவருக்கான மதுபானசாலை எண்ணிக்கை 3 ஆக மட்டுப்படுத்தப்படவுள்ளது. அனுமதிப்பத்திரத்திற்கான பெறுமதி 2 மடங்காக அதிகரிப்பு

வாகனங்களை பொருத்தும் நிறுவனங்களிடமிருந்து 12,000 மில்லியன் ரூபா வருவாய் எதிர்ப்பார்ப்பு.

அரச வங்கிகளில் ஈடுவைக்கப்பட்டுள்ள நகைகளுக்கு வட்டி விலக்களிப்பு (200,000 ரூபாக்கு குறைவானது)

5000 சதுர அடிக்கு அதிகமான பரப்பரளவு கொண்ட , 100 மில்லியன் ரூபா அல்லது அதற்கு அதிகமான பெறுமதி கொண்ட வீடுகளுக்கு வருடாந்தம் 1 மில்லியன் ரூபா வரி.

இது தவிர நிறுவனங்களின் நட்டங்கள் , மக்கள் மீதான கடன்சுமை , முன்னாள் ஜனாதிபதியின் செலவு என பல விடயங்கள் தொடர்பில் நியமைச்சர் சபையில் கருத்து வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.