Header Ads



குருநாகலில் 'சார்லி ஹப்டோ' பத்திரிகையை கண்டித்து, முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

-இக்பால் அலி-

உலகளாவிய முஸ்லிம்களை நையாண்டி பண்ணி பிரான்ஸில் வெளிவரும் சார்லி ஹப்டோ பத்திரிகைக்கும் அதில் வெளியான  கார்டூன் எதிராகவும்   கண்டித்து இன்று குருநால் நகரிலுள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால்  ஜும்ஆத் தொழுகைக்குப் பிற்பாடு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குருநாகல் பஸார்  வாலிப சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதங்களை நிந்திக்காதே, பிரான்ஸ் நாட்டுப் பொருட்களைத் தடை செய், ஊடக சுதந்திரத்தை இழிவு படுத்தாதே, அல்லாஹ். நபி (ஸல்) அவர்களை இழிபடுத்துபவர்களை நாசம் பண்ணிவிடு போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கைகளில் ஏந்தி கோசமெழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவத்தகம பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ், நசார் ஹாஜியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டுக்கு இது தொடர்பாக மகஜர் கையளிக்கவுள்ளதாகவும் பிரான்ஸ் கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.







1 comment:

  1. அன்று ஒரு திரைப்படம் .. இன்று ஒரு பத்திரிகை.. நாளை ஒரு தொலைக்காட்சி.. இன்னொரு தினம் ஒரு வானொலி.. இணையத்தளம் என்று இவ்வாறான மத உணர்வுகளைப் புண்படுத்தி வேடிக்கை பார்க்கும் போக்கு இனிமேலும் தொடர்ந்து கொண்டிருக்கத்தான் போகின்றது.

    குறிப்பிட்ட மத உணர்வுகளை சீண்டினால் அந்தந்த மதங்களைப் பின்பற்றுவோரின் எதிர்விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதை இத்தகைய ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் அதன் பின்னணியில் இருப்பவர்களும் அறியாதவர்களல்ல.

    நம்மைச் சீண்டிவிட்டு நாம் எப்படி எதிர்வினையாற்றுகின்றோம் என்று கவனித்து அதை வைத்தே நம்மை 'நவீன உலகின் காட்டுமிராண்டிகள்' என்று சித்தரிக்கும் - நிரூபிக்கும் பணியை மேற்கத்திய ஊடகங்களில் பல முனைப்பாகச் செய்து வருகின்றன.

    இவை ஒவ்வொன்றுக்கும் நாம் வன்முறைப் பாணியிலான எதிர்விளைவுகளைத்தான் காண்பித்துக்கொண்டு இருக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி?

    இவ்வாறான விடயம் நிகழ்ந்தால் அவற்றுக்கு ஜனநாயக ரீதியில் நாம் எமது எதிர்ப்புகளை ஆரம்பிக்காமல் சட்டரீதியாக அணுகாமல் எடுத்தவுடன் வன்முறையில் இறங்கிவிடுகின்றோம்.

    இதையேதான் அதைச் செய்பவர்களும் எதிர்பார்த்திருக்கின்றனர். அவ்வாறாயின், நாம் அதையே செய்து செய்து அவர்கள் எமக்காக விரித்திருக்கும் பொறிவலையில் வசமாக மாட்டிக்கொள்கின்றோம்.

    இத்தகைய மத உணர்வுச் சீண்டர்களை வன்மையாக எதிர்க்கும் மேற்குலக மக்களின் நியாயமான ஆதரவையும் நாம் இழந்து விட இத்தகைய நமது வன்முறை வழிகள்தான் காரணமாகின்றன.

    உணர்வுபூர்வமாக அணுகாமல், அமைதியான எதிர்ப்பின் மூலம் நியாயபூர்வமாக அணுகி, அங்குள்ள பிற மத மக்களிடமும் நம்மீதான அனுதாபங்களையும் சேகரித்து நம்மைச் சீண்டுபவர்களைத் தனிமைப்படுத்தலாம். அந்தந்த நாட்டின் வழக்கத்திலுள்ள சட்டத்தினைப் பயன்படுத்தியே அவர்களைத் தண்டிக்கலாம்.

    அதைவிடுத்து, அலுவலகத்தினுள் புகுந்து மனிதர்களைக் கொல்வதெல்லாம் நம்மைப்பற்றி அவர்கள் கட்டமைத்திருக்கும் பொய்யான பிம்பத்தை நாமே வலிந்து உண்மையாக்குவதற்கே உதவும்.

    சிந்தித்துப் பாருங்கள்!

    ReplyDelete

Powered by Blogger.