Header Ads



நிந்தவூரில் தென்னை அபிவிருத்தி அதிகாரி இல்லை..!

-மு.இ.உமர் அலி-

தெங்கு  அபிவிருத்திச்சபையின்  கீழ்  ஒவ்வோர் பிரதேசத்திலும்  தெங்குச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில்  தென்னை  அபிவிருத்தி  உத்தியோகத்தர்  காரியாலயங்கள்  அமைக்கப்பட்டு அக்காரியங்கள் மூலமாக பல்வேறுபட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழமை.

அந்த வகையில்  வடக்கில் காரைதீவையும், தெற்கில் அட்டாளைச்சேனையையும்,மேற்கில் தீகவாபியையும்  எல்லையாகக்கொண்டு அதன் அகத்தே இருக்கின்ற  வளம் மிக்க பகுதிகளை  உள்ளடக்கிய  ஒரு வலயத்திற்கான  தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஒரு காரியாலயம் நிந்தவூர் கமநல சேவை நிலையத்தில்  உள்ளது.

இந்த பிரதேசமே அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான தென்னை பயிர்செய்யும் இடப்பரப்பினை  கொண்டுள்ளது.

இந்த காரியாலத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக  ஒரு நிரந்தரமான  தென்னை பயிர்செய்கை அதிகாரி -CDO   நியமிக்கப்படாமல் இருக்கின்றார்.இங்கு  தற்காலிகமாக  தென்னக்கோன்  என்னும் ஒரு தென்னை பயிர்செய்கை அதிகாரி(CDO) பதில் கடமைக்காக  நியமிக்கப்பட்டிருக்கின்றார்.இவர் அம்பாறை ,தமனைஆகிய பிரதேசங்களில்  உள்ள தென்னை பயிர்செய்கை   காரியாலயங்களிலும்  கடமை புரிகின்றார்.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களை சேர்ந்த தென்னைப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர்கள் ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் பெறுவதற்கு  மிகவும் சிரமப்படுகின்றனர்.இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிட்டாதா  என்று  விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே  இப்பிரதேசத்தைச்சார்ந்த அரசியல் செல்வாக்குள்ள பிரமுகர்கள்  குறித்த திணைக்களத்தினை அணுகி,இக்குறையை  நிவர்த்திசெய்ய  உடன் நடவடிக்கை எடுப்பார்களாயின்  அவர்களை வாக்குகள் இட்டு  உயர் இடங்களில் வைத்த மக்களுக்கு  செய்யும் கைமாறாக இருக்குமல்லவா?கட்டிடங்களும்,பாதைகளும் தேவைதான் ஆனால் இது போன்ற சேவைகளும் மக்களுக்கு கிடைக்கவேண்டியது இன்றியமையாததே!

No comments

Powered by Blogger.