Header Ads



கிழக்கு முதலமைச்சரை, ரவூப் ஹக்கீமே தெரிவு செய்வார்

ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான முதலமைச்சர் தெரிவுக்கு பச்சைகொடி காட்டியுள்ள நிலையில், கிழக்கு முதலமைச்சரை நியமிக்கும் அதிகாரம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்த ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய பச்சைக்கொடி குறித்து குறிப்பிட்டுள்ளதுடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒற்றுமைபட்டு, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒரு முதலமைச்சரை தெரிவு செய்யும்படி வேண்டியுள்ளார்.

எனினும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தாம், ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளாது, அந்த தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை மீண்டும் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து மிகவிரைவில் கிழக்கு மாகாண முதலமைச்சராக, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரின் பெயரை ரவூப் ஹக்கீம் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. ஹபீஸ் நசீர் -
    பணத்தின் மூலம் எதையும் சாதிக்க நினைக்கும் மனிதர், தலைவர் அஷ்ரப் அவர்கள் இவரை நம்பி தாருஸ் சலாமை கட்டுவதற்கு கொடுத்தார் இப்போது அவரது சொத்தாக நினைத்து நடந்து கொள்கிறார். கட்டடத்தையே ஏப்பம் விடுவாரோ தெரியாது?? அடிப்படையில்... அடிப்படை அரசியல் சித்தாந்தத்தில் தெளிவு இல்லாதவர். ஒட்டுமொத்தத்தில் ஒரு வியாபாரி.

    ஜமீல் -
    அரசியலில் ஒரு தாதாவாக வர நினைக்கும் மனிதர். தெவின கும சட்ட மூலத்தின் மூலம் தனது நம்பகத் தன்மையை இழந்தவர். தன்னை முன்னிலைபடுத்தி செயற்படுபவர். அடிப்படை அரசியலை புரிந்து கொள்ளக் கூடியவர்.

    தவம் -
    தன்னை முன்னிலை படுத்தி செயற்படுபவர். இதற்காக எதையும் செய்யக் கூடியவர். ஒரு காலத்தில் இந்த முஸ்லிம் காங்கிரசை அளித்தொளிப்பதட்காக முலுமூச்சாக செயற்பட்டவர். இந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு ஒத்தக்காலில் நின்றவர். நியாயம், தர்மம், உண்மை இவைகளையும் மீறி தப்பு தப்பாக விளக்கும் கொடுக்க முனையும் நபர். அடி தடி அரசியலுக்கு மிகச் சிறந்தவர். ஒரு பக்குவம் உள்ள அரசியல்வாதிக்கு எடுபுடியாக இருப்பதற்கு மிகச் சிறந்தவர்.

    ஆரிப் சம்சுதீன் -
    அரசியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொள்ள முனைப்பில் உள்ளவர். தன்னை விட சமூகத்தை முன்னிலைபடுத்தி நடக்கக் கூடியவர். நீதி நியாயத்தை பேசுவதற்கு பின்னிட்காதவர். துடிப்புள்ள இளம் அரசியல் வாதி.

    ReplyDelete

Powered by Blogger.