Header Ads



இனக் கலவரத்தைத் தூண்டி, ஆட்சியைக் கைப்பற்ற மஹிந்த ராஜபக்ச தரப்பினர் முயற்சி - ராஜித சேனாரட்ன

இனக் கலவரத்தைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பினர் முயற்சித்து வருவதாக அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவின் பிரிகேடியர் நண்பர் ஒருவரைக் கொண்டு இந்த சதித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

வடக்கின் சில இராணுவ முகாம்கள் மீது புலிகள் தாக்குவதனைப் போன்று இராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் இவ்வாறான சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

கோத்தபாயவிற்கு நெருக்கமான பிரிகேடியர் ஒருவரின் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய்கள் இந்த தாக்குதல்களுக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

500 இராணுவச் சிப்பாய்களுக்கு இரகசியமாக இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இனவாதத்தை தூண்டி அதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதே மஹிந்த தரப்பின் முயற்சியாகும்.

எனினும் இந்த சூழ்ச்சித் திட்டம் குறித்து இராணுவத்தினரே எமக்கு தகவல்களை வழங்கினர். புதிய அரசாங்கத்தை பாதுகாக்க பலரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இராணுவ சூழ்ச்சித்திட்டம் தொடர்பில் அமைச்சரவைக்கு தகவல்கள் வழங்கப்படும் அதன் பின்னர் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என சிங்கள தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சி ஒன்றில் 26-01-2015 நேற்றிரவு பங்கேற்று தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நாட்டை நாசமாக்கியது போதாமைக்கு மீண்டும் அராஜகப் பாதையில் செல்ல முனையும் கீழ் தரமான ஓர் குடும்பம். இவர்கள் இழைத்த அநியாயங்களர் பற்றிய விசாரனைகள் முன்னெடுக்கப்படும்போது தப்பவே முடியாது என்பதற்காகவே இவ்வாறான திட்டங்களைத் தீட்ட முனைகின்றனர். பார்த்துப் பார்த்து இருக்காமல் வரு முன் காப்போனாக ழுமுக் குடும்பத்தையும் சிறையில் அடைப்பது தான் நாட்டுக்கு நலம். புதிய அரசாங்கத்தின் வேகம் போதாது. அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete
  2. The New govt; must expedite the matter of bringing
    The wrong doers of the previous regime to justice.

    ReplyDelete

Powered by Blogger.