Header Ads



மைத்திரியும், ரணிலும் பொய் சொல்கிறார்கள் - ஐ.தே.க. எம்.பி. அதிரடி

-Gtn-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பொய்யுரைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி வந்த தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மிகவும் நாகரீகமான முறையில் ஜனநாயக வழிமுறைகளுக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பதவியை விட்டு வெளியேறியதாக கூறி வரும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் ரணிலும், ஜனாதிபதி மைத்திரியும் மிகவும் ராஜதந்திர ரீதியில் இந்தப் பிரச்சினையை அணுகி உண்மையை வெளிப்படுத்தாது விட்டனர் எனஅவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதனை தடுக்கும் நோக்கில் அவர்கள் இருவரும் உண்மையை வெளிப்படுத்தாமல் விட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவை ஆட்சி மீடமேற அனுமதிக்கவில்லை எனவும், அதனை தடுக்க பல்வேறு வழிகளில் முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மைகளை வெளிப்படுத்துவதன் மூலம் தமது பதவிகளை இழக்க நேரிடும் என்ற போதிலும் மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Good thing however he is gone don't worry be happy.

    ReplyDelete

Powered by Blogger.