Header Ads



குழந்தைகளின் மரணத்திற்கு, காரணமாகும் சோபா - அதிர்ச்சித் தகவல்

வரவேற்பறையின் ஹீரோ, ஹாயாக தொலைக்காட்சிகள் பார்க்க உதவும் நண்பன், பெட்ரூம் போரடிக்கும்போது தூங்க உதவும் பெஸ்ட் ரூம் என்று மனதுக்கு நெருக்கமான ஓர் இடமாகவே சோபாவைப் பற்றி தோன்றும். ஆனால், ‘குழந்தைகள் தூங்கக் கூடாத ஓர் அபாய இடம்’ என்கிறது The Journal of Pediatrics என்ற இதழ். 

குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வைத்து நடந்த ஓர் ஆய்வின் முடிவில்தான்  சராசரியாக 8 குழந்தைகளில் ஒருவரின் மரணத்துக்கு சோபாவில் தூங்குவது காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூக்கம் தொடர்பான 9 ஆயிரத்து 73 குழந்தை மரணங்களில், ஆயிரத்து 24 குழந்தைகள் சோபாவில் தூங்கியபோது உயிர் இழந்திருக்கிறார்கள். இதில் 3 வயது வரை உள்ள குழந்தைகளின் மரணம் மிகவும் அதிகம். கீழே தவறி விழுவது, பெரியவர்கள் நெருக்கமாக அணைத்துக்கொண்டு தூங்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகியவை முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டிருக்கின்றன. 

இந்த அபாயங்களைத் தவிர்க்க குப்புறப்படுத்து உறங்கப் பழக்குவது, தொட்டில் பயன்படுத்துவது, குழந்தைகளை அவர்களுக்கான பிரத்யேக இடத்தில் தூங்க வைப்பது போன்ற வழிமுறைகளைக் கையாளவும் பரிந்துரைக்கிறது இந்த ஆய்வு. ஆதலால், குட்டித்தூக்கமாக இருந்தாலும் குட்டிப் பாப்பாவுக்கு அது கூடாத இடம் என்பதை மறக்க வேண்டாம்!

1 comment:

  1. தலைப்ப பார்ததுமே வெல்லவத்த சம்பவமோ எண்டு பயந்துடேன்பா பாவம் அந்த பிஞ்சு அள்ளாஹ் பிள்ளைக்கும் பெற்றோர்கும் ரஹ்மத் செய்யட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.