Header Ads



தன் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொண்டால், அவர்கள் மதங்களின் சார்பாக வாழ்பவர்களாகும் - தேர்தல் ஆணையாளர்

சகல அரசாங்க அதிகாரிகளும் நீதியுடனும் மனசாட்சிக்கு உண்மையாகவும் வேலை செய்தால் சிறந்த நாட்டை நிர்மாணிப்பது பெரியதொரு வேலை இல்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.

மொனராகலை மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் புதிய உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாராவது தன் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொண்டால் அவர்கள் மதங்களின் சார்பாக வாழ்பவர்களாகும். மனச்சாட்சிக்கு உண்மையாக வேலை செய்தால் அவர்கள் சிறந்த அரசியல் கட்சி கொள்கையின் படி வேலை செய்பவர்களாகும்.

மனசாட்சிக்கு உண்மையாக வேலை செய்தால் அவர்கள் அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களின் படி வேலை செய்பவராகும்.

எனவே அரசாங்க அதிகாரிகளான நாங்கள் அனைவரும் மனச்சாட்சிக்கு உண்மையாகவும் நீதிக்கு உண்மையாகவும் செயற்பட்டால் எங்கள் நாட்டை சிறந்த நாடாக மாற்ற முடியும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. திரு. மகிந்த தேசப்பிரிய அவர்களே!

    மிகச் சரியாகக் கூறியிருக்கின்றீர்கள்

    அது ஒருபுறமிருக்க, நமது தீவில் நல்லாட்சி ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தோன்றியிருக்கும் இந்த வரலாற்று ஆட்சிமாற்றத்தை உருவாக்குவதற்காக கடந்த தேர்தலிலே வாக்களித்த அனைத்து இனத்தையும் சேர்ந்த மக்களுக்கும்தான் நான் முதலில் நன்றி தெரிவிப்பேன்.

    மக்களுக்கு அடுத்தபடியாக இரண்டு தனி நபர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவிக்க நான் நினைத்தால் அவர்களில் ஒருவர் சந்தேகத்திற்கிடமின்றி நிச்சயமாக நீங்கள்தான் ஐயா.

    உங்களுடைய துணிச்சலும் விடாப்பிடியுடன் கூடிய அர்ப்பணிப்பும்தான் இந்த மாற்றமெனும் நீரோடை தங்கு தடையின்றி பாய்ந்து வர உதவிய நிலப்படுகை. நீங்கள் சிறிது தளர்ந்திருந்தாலும் இந்த நல்லாட்சி நீரோடைக்குப் பதில் இரத்த ஆறுதான் பாய்ந்திருக்கும்.

    நன்றி ஐயா!

    அதுசரி, அந்த மற்றையவர் யாரெனக் கேட்கின்றீர்களா?

    அவர் சோதிடர் திரு. சுமணதாச அபே குணவர்த்தன!

    ReplyDelete

Powered by Blogger.