Header Ads



சாய்ந்தமருதில் கல்விக்கு நூலகம், உடல் ஆரோக்கியத்திற்கு ஜிம் சென்டா்



(ஹாசிப் யாஸீன்)

சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழத்தின் ஏற்பாட்டில் நூலகம் மற்றும் ஜிம் சென்டர் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு கடற்கரை வீதியில் அமைந்துள்ள பௌஸி மைதானத்திற்கு முன்பாக பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக காரியாலய கட்டிடத்தில்  இன்று (30)  வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 

சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழத்தின் ஆயுட்காலச் செயலாளர் எஸ்.முஹம்மது கான் அவர்களின் வழிநடாத்தலில் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற அதிபருமான ஐ.எல்.ஏ. மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து இதனைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர் உள்ளிட்ட கழக வீரர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனா்.

இதன்போது நூலகத்திற்கும், ஜிம் சென்டருக்குமான அங்கத்தவா்களை இணைத்துக்கொள்ளும் பொருட்டு பிரதேச செயலாளாரினால் அங்கத்துவ அட்டை வழங்கி வைக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.