Header Ads



புதிய பட்ஜட் தொடர்பில், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன் ஆகியோரின் கருத்துக்கள்..!

கடந்த தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் முற்றாக நிறைவேற்றப்படுகின்ற இந்த விடயம் மக்களுக்கு மிக ஆறுதலைத் தரும் என அமைச்சர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பட்ஜட் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது கூறியதாவது,

அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இந்த வரவுசெலவுத்திட்டம் மக்கள் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலான அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு, அதேநேரம், மக்களுக்கு தக்களுடைய வாழ்க்கைச் செலவைக் சமாளிப்பதற்கு ஏதுவாக சம்பள அதிகரிப்பு தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதம் உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் இருப்பது மகிழ்ச்சிகுரிய விடயமாகும்.

கடந்த தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் முற்றாக நிறைவேற்றப்படுகின்ற இந்த விடயம் மக்களுக்கு மிக ஆறுதலைத் தரும் என்றே நம்புகிறேன். பாராளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு 50 இலட்சம் ரூபாவிலிருந்து ஒரு கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருப்பது ஒரு வரவேற்கத்தக்க விடயம்.

ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது ஒதுக்கப்பட்டிருப்பது இந்த தேசிய அரசியலில் எல்லோரையும் அழைத்துச் செல்லும் ஒரு நடவடிக்கையாகவே கருதுகிறேன். இதுவொரு மகிழ்ச்சிக்குரிய விடயம்.

எவருடைய தயவும் இல்லாமல் இந்த நிதி எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் வழங்கத் தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்கது.

உரமானியம் வழங்கும் விடயத்திலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் உரத்தின் தரத்தை கருத்தில்கொண்டு பெற்றுக்கொடுக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவித்து விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் வரவுசெலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த வரவுசெலவுத்திட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகூடிய மக்களின் ஆதரவைப் பெறுகின்ற ஒரு வரவுசெலவுத்திட்டமாகவே கருதுகிறேன்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன்

இந்த வரவுசெலவுத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின்போது மைத்திரி நிர்வாகம் என்பதை அறிமுகப்படுத்தி முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரவுசெலவுத்திட்டமாக இதனைப் பார்க்கிறோம்.

குறிப்பாக கைத்தொழில்துறையை மேம்படுத்துவதற்காக அதேபோல இந்த நாட்டில் வாழுகின்ற வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கக் கூடிய பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்த வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளது.

ஏற்றுமதித்துறையை மேம்படுத்துவதற்காக பல ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இதனூடாக எதிர்காலத்திலே மைத்திரி ஆட்சியை இந்த நாட்டில் நிலைநாட்டுவதற்கு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் வழங்கிய அந்த ஆதரவை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு ஆரம்பமாக இந்த வரவுசெலவுத்திட்டம் அமைந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

No comments

Powered by Blogger.