Header Ads



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சற்றுமுன்னர் வெளியிட்ட அறிக்கை (அறிக்கை இணைப்பு)

தனக்கு எதிராக குரோத உணர்வுடன் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை கார்ல்டன் இல்லத்திலிருந்து 27-01-2015  வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக குரோத உணர்வுடன் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. அண்மைக் காலமாக ஊடகங்களில் எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிராக மிக மோசமான வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி இராணுவ சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை.

சில தரப்பினர் செய்து வரும் பிரச்சாரங்களைப் போன்று கடந்த 9ம் திகதி அதிகாலையில் அலரி மாளிகையில் இராணுவ சூழ்ச்சித் திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே சுமூகமான முறையில் நான் அலரி மாளிகையை விட்டு வெளியேறினேன்.

தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் எனது குடும்பத்தினருக்கு எதிராக கடுமையான சேறு பூசல்கள் இடம்பெற்று வருகின்றன.

அலரி மாளிகையின் உட்பகுதியில் மக்கள் பணத்தில் பாரியளவில் ஆடம்பர கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

எனினும் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டுத் தலைவர்களின் வசதி கருதி, கழிவறகைளில் காற்று சீராக்கி பொருத்தப்பட்டது.

எனது மனைவி தங்கம் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கு பொலிஸாரே பதிலளித்துள்ளனர். அதனால் அது பற்றி பேசப் போவதில்லை.

எனது அரசாங்கம் ஊழல், விரயம் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

என்னையும் எனது குடும்ப உறுப்பினர்களையும் பற்றி மக்களிடம் பிழையாக காண்பிக்கும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக ஜனாதிபதி தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



6 comments:

  1. ஐயா பெரியவரே,

    கழிப்பறையில் காற்றுச் சீராக்கிகள் பொருத்தியதற்கு விளக்கம் சொல்லிவிட்டால் மட்டும் போதுமா..?


    பிரதமரின் பதவியேற்புக்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களே பாடசாலைப் பிள்ளைகள் பொருட்காட்சி பார்ப்பதுபோல வாயைப்பிளந்து வியந்துபோய் பார்த்து நின்றதையெல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் கவனிக்கவில்லையா..?

    வெளிநாட்டு பிரமுகர்களுக்கு நல்ல கழிவறை அவசியம்தான்.

    ஆனால் அவர்களுக்கு எதற்கு மில்லியன் விலையில் கிளிகளும், உயர்சாதி குதிரைகளும் நாய்களும் அவற்றுக்கு குளிர்சாத அறைகளும்?

    பாலுக்கும் பாணுக்கும் வழியில்லாமல் ஆற்றில் குழந்தைகளை வீசிய ஏழைத்தாய்மார்களை நாட்டில் வைத்துக்கொண்டு நாய்களுக்கு ஏசி ரூம் போடுவதுதான் உங்கள் ஆசிய அதிசயமா ஐயா பெரியவரே..?

    'அலரி மாளிகைக்கு தனியாக ஒரு ஆணைக்குழு அமைத்தாலும் போதாது.. தனி அமைச்சரவையே அமைத்து விசாரிக்க வேண்டும்' என்று கூறுமளவுக்கு உங்கள் மீது அன்றாடம் குவியும் ஊழல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் வைத்திருக்கின்றீர்கள்..?

    உங்கள் மீது ஆவணரீதியில் ஆதாரபூர்வமாக வைக்கப்படும் எல்லாமே தனிப்பட்ட விரோதச் சேறுபூசல்கள்தானா..?

    சரி, இப்பொழுதானே ஆரம்ப ஓவர்கள் முடிந்திருக்கின்றது. இன்னும் நிறைய ஓவர்கள் போனால்தானே உங்கள் ஆட்டத்தின் உண்மையான நிலைமை தெரியவரும்.

    அதுவரை ரூம் போட்டு யோசியுங்கள்.

    ReplyDelete
  2. Wow, keep the ambulance ready at his residence, he may try to sucide

    ReplyDelete
  3. இவர் குற்றம் எதுவும் செய்யாத நல்ல மனிதர். பாவம். இவர் மீதும் இவரின் குடும்பம் மீதும் வீணாக சேறு பூசுகின்றனா. உண்மை தான். சாணியை அறைத்து ஊற்ற வேண்டிய படுபாவியின் மீது சேறு பூசுவது தவறே தான்.

    ReplyDelete
  4. நண்பர்கள் ஜோ முகம்மது, கொக்ஸ்ப்ரஸ், மற்றும் நுறுல்

    உங்களது ஆதரவுக்கு நன்றி. நிகழும் அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வரவேண்டியது நம் சமூகத்திலுள்ள அனைவரினதும் கடமையாக இருக்கின்றது.

    இனிவரும் காலங்களில் நம் சமூகத்தில் எவரும் அரசியல் அறியாதவர்களாக இருக்கக்கூடாது என்பதுதான் எனது அவா.

    அறிவுடமையுள்ள சமூகமாக நாம் இருந்தால்தான் எதிர்காலத்தில் பிறரால் மட்டுமல்ல, நம்முடைய புல்லுருவி அரசியல்வாதிகளாலும் ஏமாற்றப்படாத மக்களாக திகழ முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.