Header Ads



முத­ல­மைச்சுப் பத­வி­யை விட்­டுக்­கொ­டுக்கத் தயார், எந்த அமைச்சுப் பத­வி­யையும் ஏற்கமாட்டோம் - ஹசன் அலி

தேசிய அர­சாங்­கத்தின் அமைச்சுப் பத­வி­களை எடுத்­தி­ருப்­ப­தனால் கிழக்கு மாகாண முத­ல­மைச்சுப் பத­வி­யினை விட்­டுக்­கொ­டுக்க வேண்டும் என்று கூறும் காரணம் வெகு­ளித்­த­ன­மா­னது. முஸ்லிம் சமூ­கத்­திற்கு சேவை செய்­யவே அமைச்சுப் பத­வி­களை ஏற்­கின்றோம் என குறிப்­பிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைத்தால் ஆத­ர­வ­ளிக்கத் தயார்; முத­ல­மைச்சுப் பத­வி­யையும் விட்­டுக்­கொ­டுக்கத் தயார். ஆனால், வேறு எந்த அமைச்சுப் பத­வி­க­ளையும் ஏற்கமாட்டோம் எனவும் தெரி­விக்­கின்­றது.

கிழக்கு மாகா­ணத்தில் ஆட்­சி­ய­மைப்­பது தொடர்பில் சிக்கல் நிலை எழுந்­துள்ள சூழலில் முஸ்லிம் காங்­கி­ரஸின் நிலைப்­பாடு தொடர்பில் வின­விய போதே கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ஹசன் அலி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கிழக்கு மாகாண சபையின் பெரும்­பான்மை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு இருந்­தாலும் தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யாத நிலை உள்­ளது. எனினும் கூட்­ட­மைப்­பினர் ஏனைய கட்­சி­க­ளுடன் இணைந்து கிழக்கு மாகா­ணத்தில் ஆட்­சி­ய­மைத்­தாலும் நாம் அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து செயற்­படத் தயா­ராக உள்ளோம்.

முத­ல­மைச்சுப் பத­வி­யினை அடுத்து இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட வேண்டும் என்­பதே ஆரம்­பத்தில் செய்து கொண்ட ஒப்­பந்தம். அதற்­க­மைய இப்­போது கிழக்கு மாகாண முத­ல­மைச்சுப் பதவி எமக்கு வழங்­கப்­ப­டு­வதே நியா­ய­மா­னது. எனினும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தற்­போது முத­ல­மைச்சுப் பத­வி­யினை விட்டுக் கொடுக்­கப்­போ­வ­தில்லை என குறிப்­பிட்­டுள்­ளது.

அத்­தோடு பல கார­ணங்­க­ளையும் கூட்டமைப்பினர் முன்­வைக்­கின்­றனர். நாம் தேசிய அரசில் அமைச்சுப் பத­வி­களை ஏற்­றி­ருப்­ப­தனால் கிழக்கு மாகாண முத­ல­மைச்சுப் பத­வி­யினை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தெரி­விப்­பது அர்த்­த­மற்ற கருத்­தாகும்.

கிழக்கு மக்­க­ளிடம் நாம் முகங்­கொ­டுக்க வேண்­டு­மாயின் கிழக்கின் ஆதிக்கம் எம்­மிடம் இருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு அவர்கள் முன்­வைக்கும் காரணம் நியா­ய­மாக இருக்­கலாம். அதே போல் எமக்கும் எம் பக்க கார­ணங்கள் நியா­ய­மா­னதே. எனவே கிழக்கு மாகா­ணத்தில் ஆட்­சி­ய­மைக்க கூட்­ட­மைப்பு தயா­ரெனின் அமைக்க முடி­யு­மெனின் நாம் ஆத­ர­வ­ளித்து செயற்­ப­டவும் தயா­ரா­கவே உள்ளோம். முத­ல­மைச்சுப் பத­வி­யி­னையும் அவர்­களே எடுத்துக் கொள்­வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் நாம் கிழக்கு மாகாண அமைச்சுப் பதவிகள் எதையும் ஏற்க மாட்டோம். நாம் வெறும் உறுப்பினர்களாகவே இருக்கின்றோம். ஆனால் ஆதரவளித்து செயற்படவும் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. I agree with Mr. Hasan Ali, according to the census of 2012, In Eastern province Muslims 575,936 (37.12%), Hindu 539,570 (34.78%), Buddhist 354,772 (22.87%), Christians 80,801 (5.21%) and Others 302 (0.02%). so Tamils between 34% - 39% while Muslims 37% and Sinhalese 23% - 25% based on the language the Christians speak. Muslims are identified as a religious group and the majority in East. More than 15 sitting members out of 37 in the council are Muslims. If Tamils still wants to occupy CM seat let them occupy but Muslims should not be partners in their provincial cabinet. Tamils still pushing the Muslims towards Sinhalese let the Muslims be wise and go with the community that accept and receive Muslims

    ReplyDelete
  2. அடடா!

    கிழக்கு மாகாண அமைச்சுப் பதவிகளை விட்டுக்கொடுத்து நமது சமூகத்திற்காக மு.கா வினர் எத்தனை பெரிய வரலாற்றுத் தியாகத்தை செய்ய நினைத்திருக்கின்றார்கள் பாருங்கள்!

    புல்லரிக்கவில்லை உங்களுக்கு..?

    ReplyDelete

Powered by Blogger.