Header Ads



இன்று கூடிய நிறைவேற்று சபை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்..!

தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தொடர்பில் உடனடி தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என இன்று 27-01-2015  கூடிய நிறைவேற்று சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று கூடிய நிறைவேற்று சபையில், நாளை மறுதினம் முன்வைக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றதாக ஜே.வீ.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று கூடிய நிறைவேற்று சபை, பிரதம நீதியரசர் தொடர்பிலும், அவரது செயற்பாடுகள் தொடர்பிலும் விஷேடமாக கலந்துயாடியது.

ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர், இடம் பெற்ற சூழ்ச்சியின் முக்கியஸ்தராக அவர் கருதப்படுகிறார்.

பிரதம நீதியரசர் தொடர்பில் உடனடி மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில்  நிறைவேற்று சபை உள்ளது.

அதேபோல, உடனடியாக எமது நாட்டு யாப்பில் பல சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்குப்படுதல் போன்ற பல சீர்த்திருத்தங்கள் முன் எடுக்கப்படவுள்ளதாக ஜே.வீ.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.