Header Ads



கிழக்கு மாகாணத்தை ஆள்வது, முஸ்லிம்களுக்கு 'பர்ளு ஐன்''

இலங்கயில் இருக்கின்ற 09 மாகானங்களில் 07 மாகாணங்களைச் பெரும்பான்மயினச் சிங்களச்  சகோதரர்களும் வட மாகாணத்தில் சிறுபான்மயில் பெரும்பான்மயாக இருக்கின்ற தமிழ்ச் சகோதரர்களும் ஆழுகின்றபோது. ஏன் சிறுபான்மயிலே இரண்டாம் இடத்திலும் அதேபோல கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மயாக இருக்கின்ற முஸ்லிம்களாகிய நாங்கள் கிழக்கு மாகாணத்தை ஆழுவது தவறா..?

எமது கிழக்கு மாகாணத்தில் மதங்களின் அடிப்படயில் நோக்குவோமாயின் 2012ஆம் ஆண்டினுடைய கருத்துக்கணிப்பின்படி

முஸ்லிம்கள்     - 575,936  (37.12%)
இந்துக்கள்           - 539,570  (34.78%)
பௌத்தர்கள்       - 354,772  (22.87%)
கிறிஸ்தவர்கள்  - 80,801    (05.21%)
ஏனையவர்கள்   - 302          (00.02%)

பெரும் பான்மயாக முஸ்லிம்கள் வாழுகின்ற மாகாணத்தை முஸ்லிம்கள் ஆழுவதில் என்ன தவறு?

கிழக்கு மாகாணசபை என்பது கிழக்கு மாகாணத்திற்கான "சட்டவாக்க அவை" ஆகும். இலங்கை அரசியலமைப்பின் படி, கிழக்கு மாகாணசபை கிழக்கு மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத்திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவணிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் என்பவற்றுக்கும்  இலங்கயினுடைய அரசியலமைப்பின் படி அதிகாரம்கள் உள்ளென. இருப்பினும் இலங்கயினுடைய நடுவண் அரசு (மத்திய அரசு)இவற்றுக்கான அதிகாரம்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. 

இலங்கயினுடைய கிழக்கு மாகாணம் (Easrern Province) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணமானது இலங்கைத்தீவின் கிழக்குக் கரயோரத்தில் அமைந்துள்ளது. வடக்கே வடமாகாண எல்லயில் இருந்து தெற்கே தென்மாகாண எல்லை வரையுள்ள நீணட கரயோரம் இம்மாகாணத்தின் கீழ் வருகின்றது.

இலங்கை பிரித்தானியரிடம் இருந்து அரசியல் விடுதைல பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி அதே ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல.42(1987) ஆகியவற்றை அறிவித்தது. (இதுவே கிழக்கு மாகாண முஸ்லிம்களிற்கு மேல் வற்புறுத்தித் திணிக்கப்பட்ட அடிமைச்சாசனம்).

1988 பெப்ரவரி 03இல் 09மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்த 09 மாகாண சபைகளில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி முஸ்லிம் மக்களினுடைய விருப்பம் அறியாமல் கிழக்கு மாகாணத்தை வடமாகாணத்துடன் ஒன்றிணைத்து ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. 

இவ் இணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.1988 செப்டம்பர் 02இல் இரு மாகாணசபைகளும் வடகிழக்கு மாகாணசபையாக இணைக்கப்பட்டன.  இந்த இணைந்த வடகிழக்குமாகாண சபைக்கன முதலாவது தேர்தல் 1988 நவம்பர் 19இல் நடாத்தப்பட்டது. 

இந்தத் தேர்தலில் இந்திய அரசினுடைய ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்குபற்றவில்லை. இந்தக் காலத்தில் தமிழீல விடுதலை புலிகளினுடைய துப்பாக்கி முனைகளுக்கு முன் நின்று சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் போட்டி இட்டது. முதலமைச்சராக அ.வரதராஜப் பெருமாளும் எதிர்க்கட்சித் தலைவராக சேகுஇஸ்ஸதீனும் இருந்தனர். 1990 மார்ச் 01ஆம் திகதி , இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கயை விட்டுப் புறப்படும் தறுவாயில் வடகிழக்கு மாகாணசபையினுடைய முதலமைச்சர் அ.வரதறாஜப்பெருமாள் மாகானசபைக் கூட்டத்தில் தமிழீலத்தை பிரகடணப் படுத்திவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்.

இதனை அடுத்து அன்றய ஜனாதிபதி ஆர்.பிரேமதாச வடகிழக்கு மாகாணபையைக் கலைத்து மத்திய அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டுவந்தார். வடகிழக்கு இனைப்புத்தொடர்பான பொது வாக்கெடுப்பு எப்போது இடம்பெறவில்லை. தற்காலிக இனணப்பு ஒவ்வோர் ஆண்டும்  அரசுத் தலைவர்களால் தற்காலிக இனைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது. இலங்கயினுடைய தேசிய வாதிகளால் இவ்விணைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு 2006 ஜூலை 14ஆஆம் திகதி மக்கள் விடுதலை முன்னனி கிழக்கு மாகாணம் தனியே பிரிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமண்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து வழக்கு விசாரனையை அடுத்து அன்றய அரசுத்தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தணவினால் அறிவிக்கப்பட்ட இனைப்பு செல்லுபடி     யற்றதாக்குவதாகக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 ஒக்டோபர் 16ஆம் திகதி உச்ச நீதிமண்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்பிறகு 2007 ஜனவரி மாதம் 01ஆம் திகதி வடகிழக்கு மாகாணம் இரண்டாகப்பிரிக்கப் பட்டது. 

இதன்பின்னர் கிழக்கு மாகாணசபை மத்திய அரசின் நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு 2008 மே மாதம் 10ஆம் திகதி முதலாவது தேர்தல் நடாத்தப்பட்டும் அன்றய சூழ்நிலைகளுக்காக முதலமைச்சராக சிவனேசதுறை சந்திரகாந்தன் முதலமைச்சரானார். அதன்பினன்னர் நடைபெற்ற மாகானசபைத் தேர்தலிலே சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி இட்டதன்பலனாக முஸ்லிம்களுக்குரிய மாகாணசபையில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்கியது. 

இப்படி இருக்கின்ற போது முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள்வது என்பதுதான் ஜனநாயக வழிமுறயும் கடமயும் கூட. இதுவும் இல்லாது போனால் முஸ்லிம் சமூகம் எங்கு செல்வது.

4 comments:

  1. நீங்க தானே 72 கூட்டாமாக பிரிந்து 7 ஆசனங்களை எடுத்தீர்கள் முதலில் ஒன்றாக சேர்ந்து தமிழர்களை விட ஆசனங்களை எடுத்து காட்டுங்க

    ReplyDelete
  2. Last time slmc won.tna asked with slmc to share the power?slmc ignored.then ruled with MR for big payment deal.thatswhat tna dosnt like to compromise with slmc.allah will guide slmc.slmc no policy party at all

    ReplyDelete
  3. புள்ளிவிபரம் எடுத்தவர் மத அடிப்படையில் இருந்ததை copy பண்ணி இருக்கிறார்... இந்த அட்டவணைக்கு மேல் இன அடிப்படையிலான அட்டவணை இருந்ததை மறைத்திருக்கிறார்.. அந்த அட்டவணை பிரகாரம் தமிழ் மக்களே அதிகமாகும்..

    தமிழர் - 617,295 - (39.79%)
    முஸ்லிம்கள் - 569,738 - (36.72%)
    சிங்களவர் - 359,136 - (23.15%)
    ஏனையோர் - 5,212 - (0.34%)

    Reference: http://en.wikipedia.org/wiki/Eastern_Province,_Sri_Lanka

    இந்த அடிப்படையில் பார்த்தல் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவது பச்ச ஹராம் என்று அவர்கள் சொன்னால் என்ன செய்வீர்கள்..?

    ReplyDelete
  4. இங்கு கருத்துக்களை பதிவிட்ட இரு சகோதரர்களும் (sana faleel ,minhaaj abdeen )சமூகத்துக்கு அப்பால் சென்று நியாயமான கருத்துக்களை சொன்னதற்கு மிகவும் நன்றி.......தற்கால சூழ் நிலையில் இரு சமூகங்களும் ஒருவரை மிதித்து இன்னொருவர் அரசியல் செய்வதால் எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகம் எம்மை விழுங்கிவிடும் சூழ் நிலையே தோன்றும்.....நடந்து முடிந்த தேர்தலில் எம் ஒற்றுமையே நாட்டில் நிம்மதியை ஏற்படுத்தியது......சாதகமான சூழல் உள்ளபோது விட்டுக்கொடுத்தால் பாதகமான நிலை உள்ளபோது பெற்றுக்கொள்ளலாம் அரசியல் செய்பவர்கள்; புரிந்துகொண்டால் எல்லாம் நன்மையே

    ReplyDelete

Powered by Blogger.