Header Ads



தாம் நியமித்த அரசாங்கத்தை நோக்கி, விமர்சனங்களே அதிகளவில் முன்வைக்கப்படுகிறது - மைத்திரிபால

தாம், நியமித்த அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் போது, சிறந்தவற்றை விட, விமர்சனங்களே அதிகளவில் முன்வைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, 6 புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

4 comments:

  1. மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களே,

    அநீதியான ஆட்சிமுறை சகியாது மாற்றம் தேடும் தார்மீகக்கோபத்திற்கும் சோம்பேறியாய் படுத்திருப்பவர்கள், எழுந்து நடமாடுபவன் மீது கொள்ளும் ஆற்றாமைக்கோபத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

    தங்களது ஆட்சிக்காலத்தில் செய்து கிழித்ததையெல்லாம் மறந்துவிட்டு, ஓடுவது எப்படி என்று சொல்லித்தரும் நொண்டிகள்தான் உங்களது நல்லாட்சிக்கான முயற்சிகளின்மீது காழ்ப்புணர்வு கொண்டு விமர்சிப்பவர்கள்.

    அவர்களது எதிர்மறை விமர்சனங்களை அலட்சியம் செய்துவிட்டு முன்செல்லுங்கள்.

    ReplyDelete
  2. அராஜகமும் அட்டூளியங்களும் ஊழலும் நிறைந்து காணபபட்டகடந்த காலத்தில் அந்த கொலைக்களத்தின் மத்தயில் மரணத்தின் விழிம்பில் நின்று நாம் எல்லோரும் இந்த வெற்றியினை பெற்றிருக்கிறோம் ஆகவே சில சில்லறைக்காசுகளின் சில்லறைத்தனமான விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு உங்களின் பணியினை செவ்வனே செய்யுங்கள் சேர் நல்ல மக்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான்

    ReplyDelete
  3. அராஜகமும் அட்டூளியங்களும் ஊழலும் நிறைந்து காணபபட்டகடந்த காலத்தில் அந்த கொலைக்களத்தின் மத்தயில் மரணத்தின் விழிம்பில் நின்று நாம் எல்லோரும் இந்த வெற்றியினை பெற்றிருக்கிறோம் ஆகவே சில சில்லறைக்காசுகளின் சில்லறைத்தனமான விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு உங்களின் பணியினை செவ்வனே செய்யுங்கள் சேர் நல்ல மக்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான்

    ReplyDelete
  4. நண்பர் பாரிஸ்,

    உங்கள் ஆதரவுக் கருத்துக்கு நன்றி.

    நம்மைப்போன்ற இலங்கை நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஒன்று திரண்டு நல்லாட்சியை முன்னெடுக்கும் ஜனாதிபதிக்கும் அவரது நேர்மையான நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்குவது காலத்தின் தேவையாகவுள்ளது. இந்தக் கருத்துக்களை நமது நண்பர்களுக்கும் தெரிவித்து ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்த ஆதரவையும் வழங்குவோம்.

    அதேவேளை தீய நோக்கத்தோடு அரசியல் இலாபம் தேடுவதற்கு யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு எமது எதிர்ப்பையும் ஒத்துழையாமையையும் வெளிப்படுத்தவும் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.