Header Ads



ஹிஸ்புல்லாஹ், தனது அனுதாபக் குறிப்பினை எழுதினார்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அண்மையில் காலஞ்சென்ற சவூதி அரேபிய நாட்டு மன்னர் மர்ஹூம் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் நினைவாக கொழும்பிலுள்ள இலங்கை சவூதி அரேபிய நாட்டு தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவு புத்தகத்தில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது அனுதாபக் குறிப்பினை 27-01-2015 இன்று செவ்வாய்கிழமை எழுதினார்.

இவ் அனுதாபக் குறிப்பில் காலஞ்சென்ற சவூதி அரேபிய நாட்டு மன்னர் மர்ஹூம் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் சவூதி அரேபிய நாட்டு மக்களுக்கும் ,உலக முஸ்லிம்களுக்கும் ஆற்றிய சேவை தொடர்பில் விஷேடமாக எழுதப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சவூதி அரேபிய நாட்டின் புதிய மன்னராக தெரிவு செய்யப்பட்டுள்ள மன்னருக்கும் வாழ்த்துக்களையும் ,பிரார்த்தனையும் தெரிவித்தார்.

இதில் விஷேடமாக காலஞ்சென்ற சவூதி அரேபிய நாட்டு மன்னர் மர்ஹூம் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் குடும்பத்துக்கு அனுப்பி வைப்பதற்காக விஷேட செய்தியொன்றை இலங்கை சவூதி அரேபிய நாட்டு தூதரகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. பாராளுமன்றத்தில் திரு. அஸ்வர் இல்லாத குறையைப் போக்குவதற்கு யாருமில்லையே என்று கவலையாக இருந்தது. பரவாயில்லை ஒருவர் இருக்கின்றார்!

    இனி சிரிப்புக்கு பஞ்சமிருக்காது!

    ReplyDelete
  2. மர்ஹும் என்ற வார்த்தையை பாவிப்பதன் சட்டம்
    மார்க அறிஞர்களின் தீர்பு ஒருவர் மரணித்த பின் மர்ஹும் என்று கூறக் கூடாது காரணம் அதன் அர்தம் அல்லாஹ்வால் கிருபை செய்யப்பட்டவர்
    ஒருவர் அல்லாஹ்வின் அருளுக்கு உற்பட்டவர் என அல்லாஹ் ரஸுல் தவிர்ந்த யாராலும் திட்டவட்டமாக கூற முடியாது
    என்றாலும் ரஹிமஹுல்லாஹ் அல்லாஹ் அவருக்கு அருள் பாளிப்பானாக என்ற துஆவை கூறுவதே சிறந்தது

    ReplyDelete

Powered by Blogger.