Header Ads



அம்மாவையோ, குடும்பத்தையோ அரசியல் சேறு பூசுவதற்கு பயன்படுத்த வேண்டாம் - நாமல் ராஜபக்ஷ

-Tm-

எனக்கும் என் தந்தைக்கும்  எந்தளவுக்கு சேறு பூசவேண்டுமோ அந்தளவுக்கு சேறு பூசவும் என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எங்களுடைய அம்மாவையோ, குடும்பத்தையோ அரசியல் சேறு பூசுவதற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

என்னுடைய தாய், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கத்தை களவெடுக்கவில்லை. முன்னாள் பிரதிபொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி என்று சொல்லப்படுகின்ற பெண்ணினால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் செய்துள்ள முறைப்பாட்டில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் அந்த முறைப்பாட்டை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

என்னுடைய குடும்பத்தில் நானும் எனது தந்தையுமே அரசியல் செய்தோம். என் இளைய சகோதரர்கள் இருவரும் அரசியலில் ஈடுபடவில்லை.  அரசியல் ரீதியில் ஏதாவது பழிவாங்கல்களை மேற்கொள்ளவேண்டுமாயின் அதற்காக என்னையும் என் தந்தையும் பயன்படுத்தவும் பலிவாங்கல்  விவகாரங்களில் குடும்ப உறுப்பினர்களை இழுக்கவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எனக்கு தெரிந்த வகையில் என்னுடைய தாய், தங்கத்தை களவெடுக்கவோ அல்லது ஊழல் மோசடிகளில் ஈடுபடவோ இல்லை என்பதனால் இந்த தங்க விவகாரம் தொடர்பில் உண்மை வெளிவரும் என்று தான் எதர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நீங்கள் எல்லோரும் செய்துள்ள அட்டகாசங்களுக்கு சேறு அல்ல பூசவேண்டும். சாணி தான் பூச வேண்டும். நாட்டை நாசமாக்கிய உங்கட வாப்பா கோத்த பெரியப்பா எல்லாரும் பொருத்திருக்கட்டும்.

    ReplyDelete
  2. திரு. நாமல்,

    குற்றமே புரியாதவர்கள் கோபம் கொள்வது நியாயம். குற்றம் தவிர வேறு எதையுமே செய்யாதவர்கள் கோபிப்பதுதான் புதுமையாக உள்ளது.

    உங்கள் தாய்ப்பாசம் எங்களையெல்லாம் மெய்சிலிரிக்க வைத்துவிட்டது. யாராக இருந்தாலும் அவரவர் தாய் என்ற உறவு உன்னதமானதுதான். அதை மறுக்க முடியாது.

    ஆனால், உங்கள் தந்தை இந்த நாட்டின் முதற்குடிமகனாக இருந்த தசாப்த காலத்தில் உங்களைப்போன்ற எத்தனை மகன்களுடைய தாய்மார்களின் கண்ணீருக்கு காரணமாக இருந்திருக்கின்றார் என்பதை யோசித்துப் பாருங்கள்.

    வன்னியில் ஆரம்பித்து அலுத்கம வரையிலும் எத்தனை குடும்பங்களின் தாய்கள் கண்ணீர் விட்டிருப்பார்கள். அவர்களுடைய கண்ணீரின் சாபங்களுக்கு பெறுமதி இல்லாமல் போகவேண்டும் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம்..?

    யுத்தம் நிறைவுபெற்ற பின்பு இந்த நாட்டின் சகல இனமக்களுக்கும் கிடைக்க வேண்டிய பொருளாதார வரப்பிரசாதங்களை கிடைக்கவிடாமல் உங்கள் மொத்தக் குடும்பமும் தடையாக இருந்ததை உங்களால் மறுக்க முடியுமா?

    பச்சைக் குழந்தைகள் பாலுக்கு வழியில்லாமல் அழுதபோது சகிக்க முடியாமல், மனதைக் கல்லாக்கிக் கொண்டு களனி கங்கையாற்றில் அவர்களை வீசிய பின்பு தற்கொலைக்கு முயன்ற ஏழைத்தாயை உங்களுக்கு நினைவில்லையா? இலட்சக்கணக்கான தாய்மார்கள் வறுமையிலும் அவர்களது பிஞ்சுக்குழந்தைகள் பசியிலும் போசாக்கின்மையால் நோயிலும் வாடிக்கொண்டிருக்கையில் நீங்களும் உங்களது தாயுட்பட குடும்பத்தினர் அனைவரும் அலரி மாளிகையில் உயர்சாதி நாய்களை வாங்கி அவற்றை குளிர்சாதன அறைகளில் வளர்த்துக் கொண்டிருந்ததை என்னவென்று சொல்வது?

    அரச ஊழியர்கள் ஊதியம்போதாமல் கடனாளிகளாகவும் இளைஞர்கள் வேலையின்றி விரக்தியிலும் அலைந்தபோது நீங்களும் உங்கள் சகோதரர்களும் மக்களின் வரிப்பணத்தில் பல மில்லியன்கள் செலவு செய்து லம்போகினியில் ஊர்சுற்ற உங்கள் தாயும் சேர்ந்துதானே இரசித்தார்?

    தவிர, உங்கள் தாயை குற்றம் சாட்டியிருப்பது வேறுயாருமல்லர். உங்களுடனேயே ஒன்றாக இருந்தவர்கள்தானே..?

    தாய் உறவு மேன்மையானது என்றாலும் சட்டத்தின் முன்பு சகலரும் ஒன்றுதான். மக்களின் வரிப்பணத்தில் சுகபோகம் பார்த்தால் அதற்குரிய மரியாதைகளை அனுபவித்துத்தானே ஆகவேண்டும். அனுபவியுங்கள்!

    ReplyDelete

Powered by Blogger.