Header Ads



முஸ்லிம் காங்கிரஸினை சுற்றி வளைக்கும் கோட்டு சூட்டு மனிதர்கள் - கிழக்குக்கு மீண்டும் 'பெப்பே'

ஒவ்வொரு தடவையும் மு.காங்கிரஸ் ஆளுந்தரப்போடு இணையும் தருணங்களில், இந்த அநியாயம் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. 

கோட்டுச் சூட்டு அணிந்து கொண்டு, தம்மை பிரபுக்கள் போல் காட்டிக் கொள்ளும் ஒரு கூட்டம் - மு.காங்கிரஸ் தலைவரை சுற்றிவளைத்துக் கொண்டு, மு.கா.வுக்குக் கிடைக்கும் வெகுமானங்களைத் தின்று தீர்ப்பதே வாடிக்கையாக உள்ளது.

மு.காங்கிரசை தமது வியர்வைகளாலும், ரத்தத்தினாலும் வளர்த்தெடுத்து வரும் ஏழை மக்களுக்கு - அந்தக் கட்சி ஆளுந்தரப்புடன் இணைந்து கொள்ளும் போது, எதுவிதப் பலன்களையும் அடைந்து கொள்ள முடிவதில்லை.

மு.காங்கிரஸ் ஆளுந்தரப்பில் இணையும் போதும், அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் போதும், எங்கிருந்தோ வரும் கோட்டுச் சூட்டுப் பேர்வழிகள் - மு.காங்கிரஸை ஆக்கிரமித்துக் கொள்கிறாறர்கள். அந்தக் கட்சிக்காக தம்மை அர்ப்பணித்த தொண்டர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. கோட்டுச் சூட்டுப் பேர்வழிகள் - அதற்கு விடுவதுமில்லை. 

மு.கா. எனும் மரம் கோடையிலும், வறட்சியிலும் வாடுகின்ற போது தமது வியர்வையினையும், ரத்தங்களையும் ஊற்றி - அந்த மரத்தினை வளர்க்கும் மக்களுக்கு, அந்த மரத்தின் பழங்களைச் சுவைக்கக் கிடைப்பதில்லை என்பது எத்தனை பெரிய அநியாயம். 

மு.கா. எனும் மரத்தின் காய்கள் கனியத் தொடங்கும் போது, எங்கிருந்தோ - சில வௌவால்கள் பறந்து வந்து, மரத்தில் அமர்ந்து கொண்டு - ஒட்டு மொத்தக் கனிகளையும் சுவைக்கத் தொடங்குகின்றன. 

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் - நீதியமைச்சராக இருந்தபோதும் இதுவே நடந்தது. கிழக்கு மாகாணத்திலிருந்து ஏதாவதொரு தேவையின் நிமித்தம் நீதியமைச்சுக்குச் செல்லும் - கட்சி ஆதரவாளர்கள் கணக்கெடுக்கப்படாமல், தட்டிக் கழிக்கப்பட்டார்கள். 

மு.கா. தலைவரின் சொந்தக்காரர்கள் என்பதற்காகவும், ஊரார் என்பதற்காகவும் அங்கு - பெரும் பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்தவர்களுக்கு, கிழக்கு மாகாணத்திலிருந்து செல்லும் கட்சித் தொண்டர்கள், ஆரவாளர்கள் பற்றி எதுவும் தெரியாது. கிழக்கு மாகாணத்திலிருந்து செல்லும் கட்சித் தொண்டர்களை, அங்கிருந்த கோட்டுச் சூட்டுப் பேர்வழிகள் தொந்தரவாகவே பார்த்தார்கள். 

இப்போதும் நிலைமை இதுதான். நீதியமைச்சராக இருந்த போது மு.கா. தலைவர் தன்னுடன் யார் யாரையெல்லாம் வைத்திருந்தாரோ, அந்தப் பேர்வழிகளைத்தான் இப்போதும் தெரிவு செய்திருக்கின்றார். இவர்களில் அதிகமானோர் வடக்கு - கிழக்குக்கு அப்பாற்பட்டவர்கள். மு.காங்கிரசின் இதயமாகக் கருதப்படும் கிழக்கு மாகாணம் குறித்தோ, அங்குள்ள - கட்சித் தொண்டர்கள் குறித்தோ, இவர்களுக்கு எதுவும் தெரியாது. 

இந்த நிலை மாற வேண்டும். மு.கா. தலைவர் தனது அமைச்சில் நியமிக்கும் நபர்கள் குறித்து இனியாவது கவனம் செலுத்த வேண்டும். கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள் குறித்த தெரிதலும் - புரிதலும் உள்ளவர்களை - தனது அமைச்சிலுள்ள பதவிகளுக்கு நியமிக்க வேண்டும். 

மு.கா. தலைவர் அம்பாறைக்கும், மட்டக்களப்புக்கும், திருகோணமலைக்கும் வரும்போது - அவரைத் தோள்களில் தூக்கிக்  கொள்வதற்கு தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், தலைவருக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் போது, கிழக்குக்கு வெளியிலுள்ள கோட்டுச் சூட்டுப் பேர்வழிகள் தேவைப்படுகிறார்களா?

இன்னொரு புறம், தற்போது - மு.கா. தலைவருக்குக் கிடைத்துள்ள அமைச்சின் கீழ், பல்வேறு திணைக்களங்கள் உள்ளன. இந்தத் திணைக்களங்களிலுள்ள முக்கிய பதவிகளுக்கு, தம்மை நியமிக்குமாறு - எங்கிருந்தோ வந்த, சில கோட்டுச் சூட்டுப் பேர்வழிகள் - மு.கா. தலைவரை நச்சரித்து வருவதாக அறிய முடிகிறது. 

அவ்வாறு நச்சரிப்பவர்களில் முக்கியமானவர் - மு.கா. தலைவரின் சொந்தக்காரர் எனவும் - உள்கட்சித் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. 

கட்சிக்காகப் பாடுபட்டவர்களுக்குத்தான், கட்சிக்குக் கிடைக்கும் வெகுமதிகளின் பலன்கள் கிட்ட வேண்டும். மு.கா. தலைவரின் அமைச்சிலும், அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களிலும் முக்கிய பதவிகளை வகிப்பதற்குப் பொருத்தமான - கிழக்கு மாகாணக் கட்சிக்காரர்கள் எவரும் இல்லையா என்ன?!

மு.கா. தலைவரும் இந்த விடயத்தில், கண்மூடித்தனமாகத்தான் நடந்து வருகிறார். மு.கா. தலைவர் அமைச்சராகும் போது, தன்னைச் சுற்றிலும் கோட்டுச் சூட்டு மனிதர்கள் இருப்பதையே விரும்புகிறார் போல்தான் தெரிகிறது. அதனால்தான், அவர் அமைச்சரானவுடன்,  சொல்லிக் கொள்ளுமளவு கட்சிக்காகப் பங்களிப்புகளைச் செய்யாத பலரை - தன்னுடன் வைத்துக் கொள்கிறார். 

இப்போதே, மு.கா. தலைவர் தன்னுடைய அமைச்சில், அவரின் சொந்த சகோதரரையும், மைத்துனரையும் பெரும் பதவிகளுக்கு அமர்த்தி விட்டார். இவர்களில் சிலருக்கு - மு.கா. தலைவருடைய அமைச்சின் கீழ் வரும் - நிறுவனங்களின் தலைமைப் பதவிகளிலும் அமர்ந்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை பிடித்திருக்கிறது. 

ஆக, இருக்கின்ற அத்தனையையும் தாங்களே எடுத்துச் சுருட்டி, அனுபவிக்க வேண்டுமென்று, இவர்கள் விரும்புகின்றார்கள். 

அப்படியென்றால், கட்சிக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணத்தவர்களுக்கு வழமைபோல்,  'பெப்பே' தானா??

7 comments:

  1. yes this is a write thing to let our people know

    ReplyDelete
  2. Excellent article and i am really happy to say this message through JAFFNA MUSLIM.COM

    ReplyDelete
  3. மிகவும் உண்மையான நிறைய பேர் கூறியும் உள்ளார்கள். அதிமுக்கியத்துவம் கொடுத்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. இப்பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்படா விட்டால்... இந்த நாட்டை ஆட்டிப் படைத்த ராஜபக்ச அன் கோ களுக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்படும் என்பதை மிகவும் கவலையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம். கிழக்கில் தலைமைத்துவம் வேணும் என்ற கோசம் எழுவதற்கு இவைகளும் ஒரு காரணம் என்பதை திரு. ஹக்கீம் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. மிகவும் உண்மையான நிறைய பேர் கூறியும் உள்ளார்கள். அதிமுக்கியத்துவம் கொடுத்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. இப்பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்படா விட்டால்... இந்த நாட்டை ஆட்டிப் படைத்த ராஜபக்ச அன் கோ களுக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்படும் என்பதை மிகவும் கவலையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம். கிழக்கில் தலைமைத்துவம் வேணும் என்ற கோசம் எழுவதற்கு இவைகளும் ஒரு காரணம் என்பதை திரு. ஹக்கீம் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  5. There are some cows in Newzeland for the purpose of collecting milk. These cows are called milk cow (Paal Madu). Similarly, There are some cows to cast the votes for Rauf Hakeem in kalmuai, Murtur, Pottuvil, Irakkamum, Natpattimunai and Maruthamunai. These foolish cows are voting cows.

    ReplyDelete
  6. this is cannot be tolerated any more and I sure the leader knows the power of Social Media. He should correct himself or other wise, we know what to do at the right time.

    ReplyDelete
  7. மட்டக்களப்பான் மடையன் என்பது மு.கா.தலைவருக்கு நன்கு தெரிந்த உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.