Header Ads



முஸ்லிம்களினால் கண்கலங்கிய மைத்திரி, 48 மணித்தியாலங்களுக்குள் புதிய அரசை உருவாக்க சபதம்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிந்து நிரம்பியதால், கொழும்பு திணறிப்போனது.

திங்கட்கிழமை மாலை கொழும்பு மருதானை டவர் மண்டபம் அருகில் குறித்த கூட்டம் நடைபெற்றது. கடுமையான உயிர் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதன்போது பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களைக் கண்டு அவருக்கு கண் கலங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்று அறிந்து கொண்ட அவர், தனது உரையின் கண்கலங்கி, சற்றுத் தடுமாறினார்.

எதிர்வரும் எட்டாம் திகதி தான் வெற்றிற்றவுடன் அனைத்து இன மக்களும் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய ஒரு இலங்கையை தான் உருவாக்குவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன  தனது உரையின்போது உறுதியளித்தார்.

48 மணித்தியாலங்களுக்குள் புதிய அரசாங்கம்- மைத்திரிபால சிறிசேன

எவ்வித கட்சி மாறல்களும் இன்றி எதிரணியின் இறுதி பிரசாரக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு முடிவடைந்தது. கொழும்பு மருதானையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

ஏற்கனவே மொரட்டுவையில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, மருதானை கூட்டத்துக்கு தாமதமாகியே வந்தார்.

இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போதும் அது இடம்பெறவில்லை.

இந்தநிலையில் அங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, 10 வருட மஹிந்தவின் ஆட்சி முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டார்.

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க, சரத்பொன்சேகா,அத்துரலியே ரத்தன உட்பட்ட பல தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினர்.

3 comments:

  1. அன்பான முஸலிம்ளே இந்த தேர்தல் நம் சமுதாயத்தின் வாழ்வா சாவா என்ற ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது இன்னும் இருக்கக்கூடிய இரண்டு நாளையும் மிக முக்கயமாக நல்லமல்களை செய்து அல்லாவிடம் கெஞ்சி கேட்ப்போம் அமைதியான முறையில் தேர்தல் நடை பறவேண்டும் மைதிரியின் வெற்றி மட்டும் இல்லை இது நமது வெற்றி அல்லாஹ் பாதுகாக்கப்பட வேண்டும் மஹிந்த தப்பித்தவறி வெற்றி பெற்றால் இருபத்தி நான்கு மணித்தியாலத்துக்குள் பல பள்ளிகள் உடைக்கப்படும் பலமுஸ்லிம் கடைகள் தீயிடப்படும் இன்னும் பல சேதங்கள் ஏற்படும் அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் எல்லாம் மடிந்தபன் தற்செயலாக நடந்தது இனிமேல் அவ்வாறு நடக்காது என்று அரபு நாட்டுக்கும் மேற்கத்தய நாடுகளுக்கும் பதில சொல்வார்கள் இரவும் பகலும் அல்லாவிடம் துஆ செய்யுங்கள் மைதிரி முஸ்லிமகளுக்கு சேவை செயதாலும் செய்யாவட்டாலும் தற்போதய நிலயைில் மஹிந்த தோல்வியடைய வேண்டும் இல்லை என்றால் பாரிய பிரச்சினை நாட்டில் ஏற்படும்என்பதில் சந்தேகம் இல்லை அல்லாஹ் நமக்காக தந்த மாபெரும் சந்தரப்பம் இது தயவு செய்து காலையில் நேரத்தோடு வாக்குச் சாவடிக்குச் சென்று தவறாமல் வாக்களியுங்கள் இது நம் கட மை ஆட்சியை கொடுப்பவனும் அதைப் பறிப்பவனும் அந்த அல்லாஹ்ஒருவனே அநியாயக்காரனின்ஆட்யை அல்லாஹ் எதிர்பாராவிதமாக கவிழ்த்திருக்கிறான் இது வரலாறு எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லீம்நிம்மதியாக வாழக்கூடிய அரசாங்கத்தை தந்தருள்வானாக ஆமீன்

    ReplyDelete
  2. May Allah hidyath him and his team

    ReplyDelete
  3. எல்லாமே உண்மைதான் நாங்கள்
    குளிரும் அளவுக்கு எள்ளாம்
    நடந்து விட்டால் சரிதான்

    ReplyDelete

Powered by Blogger.